பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் 瀋 77 雛 தாயின் மேவிய தற்பர மேமுல்லை வாயின் மேவிய மாமணி யேஉன்தன் - கோயின் மேவிநின் கோமலர்த் தாள்தொழா தேயின் மேவி இருந்தனன் என்னையே (1) தில்லை வாய்ந்த செழுங்கனி யேதிரு முல்லை வாயில் முதல்சிவ மூர்த்தியே தொல்லை யேன்உன்தன் தூய்திருக் கோயிலின் எல்லை சேரஇன் றெத்தவம் செய்ததே (2) மண்ணின் ஓங்கி வளர்முல்லை வாயில்வாழ் கண்ணுண் மாமணி யேகரும் பேஉனை எண்ணும் அன்பர் இழிவடைந் தால்அது பண்ணும் நின்அருள் பாரிடை வாழ்கவே (3) இனிமையான பாடல்கள். இத்தலம் பற்றி ஒரு குறிப்பு: பழங்காலத்தில் இத்தலம் முல்லைக் காட்டாக இருந்தது. தொண்டை நாட்டைச் சேர்ந்த மன்னன் ஒருவன் இவ் வழியாக ஏகினபோது அவனது யானையின் காலில் முல்லைக் கொடிகள் சிக்கி யானை நின்றது. மன்னன் இறங்கி, கொடிகளை வெட்டினான். வெட்டுண்ட இடத் திலிருந்து இரத்தம் பீறிட்டது. அகழ்ந்து பார்க்கையில் சிவலிங்கம் ஒன்று தென்பட்டது. வெட்டுப்பட்ட இலிங்கத்திலிருந்து குருதி வழிந்தது. மன்னன் காடு வெட்டி நாடாக்கிக் கோயில் கட்டினான். இதனால் இத்தலத்து இறைவனுக்கு வெட்டுத் தாங்கி ஈசுவரர்' என்ற காரணத் திருநாமமும் ஏற்பட்டது. திருக்கோயி லின் அர்த்த மண்டபத் தூண்கள் இரண்டும் எருக்க மரத்தாலானவை. இது தலத்தின் சிறப்பு. 13. அபராத விண்ணப்பம்: பத்துத் திருப்பாடல் களாலமைந்த இப்பதிகம் திருவொற்றியூர் எம்பெரு மானை நோக்கி வேண்டுவதாக அமைந்தது. எழுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தயாப்பால் அமைந்த பாடல்