பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் 缘 79 笨 யூர் பெருமானை மகிழ்விக்கின்றது. பாமாலை கொச்ச கக் கலிப்பாவால் ஆக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொரு பாடலும் எழுத்தறியும் பெருமாளே என்று முடிவு பெறுகின்றது. ஒற்றியூர் பெருமாளின் திருநாமம் எழுத் தறியும் பெருமாள் என்று குறிக்கப் பெறுகின்றது. இப்பதிகத்தில் சில பாடல்களைக் காண்போம். சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை முந்தை வினைதொலைத்துன் மொய்கழற்காள் ஆக்காதே நிந்தைஉறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமாளே (1) நில்லா உடம்பை நிலைஎன்றே நேசிக்கும் பொல்லாத நெஞ்சப் புலையனேன். இவ்வுலகில் சொல்லா மனநோயால் சோர்வுற் றலையும்அல்லல் எல்லாம் அறிவாய் எழுத்தறியும் பெருமாளே (5) வீட்டுக் கடங்கா விளையாட்டுப் பிள்ளைஎனத் தேட்டுக் கடங்காத தீமனத்தால் ஆந்துயரம் பாட்டுக் கடங்காநின் பத்தர் அடிப்புகழ்போல் ஏட்டுக் கடங்கா தெழுத்தறியும் பெருமாளே (16) ஊழை அகற்ற உளவறியாப் பொய்யன்.இவன் - பீழைமனம் நம்மைப் பெறாதம் மனங்கொடிய தாழைஎன எண்ணிஎன்னைத்தள்ளிவிட் டால் என்செய்வேன் ஏழைநான் ஒற்றி எழுத்தறியும் பெருமாளே (24) பண்ண முடியாப் பரிபவங்கொண் டிவ்வுலகில் நண்ண முடியா நலங்கருதி வாடுகின்றேன் உண்ணமுடி யாஅமுதாம் உன்னைஅன்றி எவ்வெவர்க்கும் எண்ணமுடி யாதே எழுத்தறியும் பெருமாளே (27) திருவொற்றியூர் பற்றிய இம் மாலையுள் அடங்கிய எல்லாப் பாடல்களும் படித்து இன்புறத்தக்கவை. அடி களின் வெள்ளை மனம் எப்படியெல்லாம் இறைவ