பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

海 80 拳 இராமலிங்க அடிகள் னோடு ஊடாடுகின்றது என்பதை காணும் நாம் வியப் புக் கடலில் ஆழ்கின்றோம். * 20. திருவடிச் சரண்புகல்: பத்துப் பாடல்களைக் கொண்ட இப்பதிகம் இறைவனைச் சரண்புகுதலைக் காட்டுகின்றது. பாடல்கள் யாவும் எண்சீர்க் கழிநெடி லடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. நெஞ்சை நோக்கி அடிகள் பேசுவனவாக அமைந்தவை இப்பா டல்கள். ஒடல் எங்கனும் நமக்கென்ன குறைகாண் உற்ற நற்றுணை ஒன்றும்இல் லார்போல் வாடல் நெஞ்சமே வருதிஎன் னுடனே மகிழ்ந்து நாம்,இரு வரும்சென்று மகிழ்வாய்க் கூடல் நேர்திரு ஒற்றியூர் அகத்துக் கோயில் மேவிநம் குடிமுழு தாளத் தாள்த லந்தரும் நமதருள் செல்வத் தந்தை யார்.அடிச் சரண்புக லாமே (1) நாட்டம் உற்றெனை எழுமையும் பிரியா நல்ல நெஞ்சமே நங்கையர் மயலால் வாட்டம் உற்றிவண் மயங்கினை ஐயோ வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே கோட்டம் அற்றிரு மலர்க்கரம் கூப்பிக் கும்பி டும்பெரும் குணத்தவர் தமக்குத் தாள்த லந்தரும் ஒற்றியூர்ச் செல்வத் தந்தை யார்அடிச் சரண்புக லாமே (7) பசிஎ டுக்குமுன் அமுதுசேகரிப்பார் பாரி னோர்கள்அப் பண்பறிந் திலையோ வசிஎ டுக்குமுன் பிறப்பதை மாற்றா மதியில் நெஞ்சமே வருதி.என் னுடனே நிசிஸ் டுக்கும்.நல் சங்கவை ஈன்ற நித்தி லக்குவை நெறிப்பட ஓங்கிச்