viii இந்த இலக்கிய ஆராய்ச்சி நூலை எழுதி உள்ளார். இது காலத்திற்கு ஏற்ற நூல்; காலத்தால் செய்த உதவி சிறிதன்று; தகுதிக்கேற்ற பேருதவியே ஆம் மேனாட்டுக் கருத்துக்களில் நம்மை ஒடியாட விடுகிறார்; அந்தப் புதிய கருத்துக்களுக்கேற்ற சொற் களைப் படைக்கவும் செய்கிறார். பழஞ்சொற்களைப் புதுப்பொருளில் பயன்படுத்துவது இடர்ப்பாட்டினை விளையாதா? என ஆசிரியரும் ஒதுவாரும் எண்ணிப் பார்த்து முடிவு கூறவேண்டும். இராவணன் தீமையே வடிவானவன் என்ற கருத்தினை மறுக்கும் வழியாக மேனாட்டுக் கருத்தினை விளக்கும் திறம், பாராட்டற்கு உரியது. பாவலன் படைத்த ஒருவனைப்பற்றி முடிவு கூற வேண்டுமானால், அவனைப்பற்றி அந்தப் பாட்டுலகில் பிறர் கூறும் கருத்துக்களையும், கதைப் போக் கினையுமே அடிப்படையாகக் கொண்டு கூற வேண்டும் என மேனாட்டு அறிஞர் ஆராய்ந்து வருகின்றனர். அந்த முறையைப் பின்பற்றும் நம் ஆசிரியர், பழைய தமிழ் முறையையும் மறவாது, சொல் சொல்லாகச் சுவைத்துப் பேருரைகள் பல தருகின்றார். இராவணன் வீழ்ச்சியைக் கலைஞன் வீழ்ச்சி' யாகக் கூறுவது போற்றற்குரியது. யாழ்க்கொடி ஏந்தி, அகத்தியரோடும் இசையில் போட்டி போட்ட கலைஞனாக அன்றோ இராவணனைக் கம்பனும் காண்கின்றான்: ஆசிரியர் ஞானசம்பந்தர், இந்தப் பகுதியில் காட்டும் நுட்பம், சுவைஞர்க்கு என்றும் பெருவிருந்தாம். அடி மனத்தினைப்பற்றி ஆராய்வார், தான்' என்ற எண்ணம், காமம்' ஆகிய இரண்டின் அளவிறந்த
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/10
Appearance