'குலஞ்செய்த ... ... ... தேடிக் கொண்டான்' 81 உள்ளிட்ட அனைவரையும் மயக்கி வந்த நிலையாகும். போரில் ஏற்பட்ட களைப்பால் மேகநாதன் தனது அரண்மனை வந்து இளைப்பாறுகிறான். இதற்குள் கருடனது வரவால் நாகடாச மயக்கிலிருந்து வானர சேனையும் இலக்குவனும் விடுபட்டனர். உயிர் பெற்றெழுந்த வானர சேனை செய்த ஆரவாரம் இராவணன் மனத்தைக் குழப்பிவிட்டது. அவன் உடனே எழுந்து இந்திரசித்தன் அரண்மனைக்கு வந்து விட்டான். அருமை மைந்தன் தன் தந்தையை அந்நேரத்தில் கண்டு, எழுந்து அடி வணங்கல் ஆற்றானாய், இரு கையாலும் வணங்கிப் பிறகு போரைப்பற்றிய தனது கருத்தைத் தெரிவிக்கிறான். "இன்னும் யான் அப்போர்க்கள மாயையினின்றும் நீங்கவில்லை, இந்திரன் திருமால் முதலியவர்களோடு போர் செய்யும் பொழுதுங்கூட நொந்திலென்; இனையது ஒன்றும் நுவன்றிலென்; மனிசன் நோன்மை, மந்திரம் அனையதோளாய்! வரம்புடைத்தன்று மன்னோ” என்று அவன் கூறினான். "இலக்குவன் தன்மை இத்தகையது. அவனோ அழிந்து விட்டான். இனி எஞ்சி இருக்கும் இராமனை வென்று போரில் வெற்றி காணலாம் என்று சொல்வதற்கில்லை. போரின் முடிவிலேயே அதனை அறிய முடியும்,' என்று கூறி முடித்தான். இந்நிலையில் இலக்குவன் முதலானவர் எழுந்த செய்தியையும், தான் இலக்குவன் வில்லின் நாணொலியைக் காதாற் கேட்டமையையும் இராவணன் கூறினான். இந்திரசித்தன் அதனை நம்ப மறுத்து, இஃது உண்மையோ? உண்மையாயின், தெய்வஞ் சிறிதன்றோ?' என்று கூறினான்.
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/100
Appearance