பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் மண்டிலந் திரிந்த போதும் மறிகடல் மறைந்த போதும் கண்டிலன் போலுஞ் சொற்ற கலுழன் அன்று என்னைக் . கண்ணால் 1 (கம்பன் - 8298) என்று இவ்வாறு கூறிக் கலுழனை எள்ளுமுகமாகத் தனது மன நிலையை வெளிப்படுத்துகிறான். இனிப் பிரமாத்திரப் படலத்தில் தந்தையும் மைந்தனும் சந்திக்கின்றனர். போரில் தான் பட்ட பரிபவமெல்லாங் கூறிய மேகநாதன், இலக்குவன் பிரமாத்திரம் தொடுக்க முயன்றமையும், இராமன் அதனைத் தடுத்தமையுங் கூறி, ‘என்னினிச் செய்வது? என்றான். இராவணன் திகைத்தான். இந்நிலை இராவணற்கு எய்தல் எளிதன்று. அத்திகைப்பு அவனது அறிவையும் மயக்கிவிட்டதை அறிகிறோம். மேல் என்ன செய்யவேண்டும் என்று அறியாது தவித்தான் மன்னன். இதன் பிறகு பிரமாத்திரப் பிரயோகத்தால் இராமன் நீங்க அனைவரும் மாள்கின்றனர். மீண்டும் தந்தையைக் கண்டு தனயன் தன் வெற்றியைப் புகன்றான். இப்பொழுது இராவணன் தனிப்பட்ட காட்சி நல்குகிறான்; இத்துணை அரும் பெருஞ் செயலைச் செய்த மைந்தனைத் தழுவினானில்லை; அவன் செயற்கு மகிழ்ந்தானில்லை; இதற்கு மாறாக வருத்தமே கொண்டான். அவன் வருத்தமெல்லாம் ஒரு வினா வடிவாக வெளிப்பட்டது: "இறந்தி லன்கொல் அவ் இராமன்"என்று . இராவணன் இசைத்தான். - . . . . . . . . - . (கம்பன் - 8626) இந்நிலையில் தந்தையைக் களிப்பூட்ட வேண்டித் தனயன் சந்தர்ப்பத்திற்கேற்ற விடையொன்று