'குலஞ்செய்த ... ... ... தேடிக் கொண்டான் 87 மிகுமே தவிர, அவர்கள் அழிவுக்குக் காரணமானவன் மீது அவளுக்கு மனமாறுதல் ஏற்படும் என்று நினைத்த இலங்கையர்கோன் அறிவை என்னென்பது! அவன் கலங்கிவிட்டான் என்பதற்கும், வெறுப்புக்கும் பகைமைக்கும் மனத்தில் இடந் தந்துவிட்டான் என்பதற்கும் வேறு என்ன சான்று வேண்டும்? இந்திரசித்தன் தன் தந்தைபாற் கொண்டுள்ள அன்பும், இராவணன் தன் தனயன்பாற் கொண்டுள்ள அன்பும் மிகச் சிறந்தனவாகும். இருவரும் ஒருவரை ஒருவர் காணா வழியே அவை வெளிப்படுந் தன்மை யுடையன. உண்மையன்பின் திறம் அஃதேயன்றோ? நிகும்பலை யாகம் வீணானமையும், தான் விட்ட படைக் கலங்கள் அனைத்தும் பயனற்றுப் போன மையும் கண்டு, இவற்றிற்கெல்லாம் காரணம் தன் சிற்றப்பனே என மேகநாதன் நினைத்தான். உடனே அவனுக்குத் தன் தந்தையின் நினைவு எழுகிறது. தந்தையை ஏமாற்றிவிட்டான் சிறிய தந்தை என அவன் உன்னுகிறான்; அச்செயலின் சிறுமையை எண்ணி வருந்துகிறான்; எள்ளலோடு கூடிய நகை பிறக்கிறது. எதிரே காணப்படுகிறான் வீடணன். வீடணன் சென்றது அரசைக் கருதியே என்பதைத்தான் நன்கறிவானாகலின், மனம் மறுகி அரக்கர் அனைவரும் மாய்ந்த பின்றை. "ஆருளர் அரக்கர் நிற்பர் அரசு வீற்றிருக்க ஐயா!' என்று கேட்கிறான். உடனே தன் தந்தையின் பெருமை நினைவுக்கு வருகிறது. முந்தைநாள் உலகந் தந்த மூத்தவா னோர்கட் கெல்லாம் தந்தையார் தந்தை யாரைச் செருவிடைச் சாயத் தள்ளிக்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/104
Appearance