'குலஞ்செய்த ... ... ... தேடிக் கொண்டான் 89 அவன் குலம் வேர் அறுமாறு செய்தது எவ்வறத்தைக் கருதியோ?” என்று கேட்கிறான் மேகநாதன், "எங்கள் குலத்தையெல்லாம், கொல்வித்தும் தோற்று நின்ற கூற்றினார் குலத்தை எல்லாம் வெல்வித்தும் வாழும் வாழ்வின் வெறுமையே விழுமி தன்றோ ?" (கம்பன் - 9101) என்று கூறி, இன்னும் வீடணன் நிலை எத்தகைய தாயிற்று என வருந்துகிறான். தந்தை இறக்கும் பொழுது தானிருந்து பார்த்தற்கில்லை. ஆதலால், "என் செயத் துணிந்தாய் சிறிய தந்தையே!" என வினவுகிறான். எழுதியேர் அணிந்த திண்தோள் இராவணன் இராமன் - அம்பால் புழுதியே பாய லாகப் புரண்டநாள் புரண்டு மேல்வீழ்ந்து அழுதியோ நீயுங் கூட ஆர்த்தியோ இவனை வாழ்த்தித் தொழுதியோ யாதோ செய்யத் துணிந்தனை விசயத் தோளாய்! (கம்பன் - 9102) 'விசயத்தோளாய் என்ற சொல்லிலேதான் எத்துணை எள்ளற்குறிப்பை வைத்துப் பேசுகிறான்! இறுதியாகத் தான் மடியினும் தந்தைக்குக் கேடு வாராமற் காக்கச் சிற்றப்பனையே ஒழித்துவிடலாமா என நினைக்கிறான். ஆனாலும் அவன் குலம் பழியை வெறுப்பதாகலின், அச்செயல் செய்ய இலேசில் மனந்துணியவில்லை. வானிடைப் புகுதி யன்றே யான்பழி மறுக்கில் ? (கம்பன் - 9103) என்று கூறி முடித்திட்டான்.
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/106
Appearance