90 ல் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இத்துணைத் தூரம் உண்மையறிந்த இந்திர சித்தன், மேற்கூறிய செயல் நடந்த சிறிது நேரத்திற் கெல்லாம் தந்தையிடஞ் சென்று போரை நிறுத்த வேண்டுகிறான். அங்கும் அவன் தந்தைபாற் கொண்ட அன்பும் மதிப்புமே வெளியாகின்றன. அம்பிட்டுத் துன்னங்கொண்ட புண்ணுடைய நெஞ்சோடும் உடலோடும் தந்தை முன் காட்சியளிக்கிறான் வீரன், தந்தை மனம் நீராய் உருகுகிறது. "ஐயனே, நீ வேள்வியை முடிக்கவில்லை என்பதை உன்னைக் காணும்போதே அறிகிறேன்; அழிவில் யாக்கை நடுங்கினை போலச் சாலத் தளர்ந்தனை, கலுழன் நண்ணப் படங்குறை அரவம் ஒத்தாய், உற்றது பகர்தி," - . (கம்பன் - 9117) என்று உசாவினான். "தந்தையே, உன் தம்பியாகிய வீடணன் சூழ்ச்சி யால் இளையோன் வேள்வியை அழித்துத் தாழ்விலாப் படைகள் மூன்றையும் பயனற்றவையாக்கிவிட்டான். யான் விட்ட மூன்று படைகளும் இலக்குவனை வலஞ் செய்து போவனவானால், அவனை யாரென்று மதிப்பது? - குலஞ்செய்த பாவத்தாலே கொடும்பழி தேடிக் கொண்டோம் ! - (கம்பன் - 9119) என்று கூறினான். மேலும், "உலகம் அழியுமென்று அஞ்சிப் பிரமாத்திரத்தை அவர்கள் பயன்படுத்த வில்லையாதலால், உயிர் பிழைத்து நின்பால் வந்தேன்." என்றான்; உடனே தந்தை என்ன நினைப்பானோ என வருத்தினான்; எனவே, தான் வந்த கருத்து முழுதையும்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/107
Appearance