பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் தன் வழியிலிருந்து நீங்குவதாயில்லை என்றால் முடிவென்ன? 'முன்னம்சாதலே உறுதி, எனத் துணிந்து சென்றான் கும்பகருணன். மந்திராலோசனை நடக்கும்பொழுதே உண்மை உணர்ந்தான் கும்பகருணன். ஆனால், தானே பொருது தோற்கும் வரை மேகநாதனுக்கு உண்மை விளங்கவில்லை. ஒருவாறு உண்மை தெரிந்ததும், மிக்க மனத் துணிவோடு தந்தைபாற் சென்று உண்மையைக் கூறுகிறான். ஒருவேளை இதனைக் கேட்பவர், மேகநாதன் போருக்கஞ்சி இங்ங்னஞ் செய்தானோ என்று தவறாக நினைத்து விடுவார்களே என்று நினைத்த ஆசிரியன், "உலகெலாங் கலக்கிவென்றான்” என்று அவனுக்கு அடை மொழி தருகின்றான். இப்பொழுது தந்தைபாற்கொண்ட காதலால் இச்செயலை மேற்கொண்டான் மைந்தன். இதனைக் கேட்ட இராவணன் மயங்கி, அகங்கார வடிவினனாய் விடையிறுத்தான். மைந்தன் மேற்கொண்ட பாசத் தினும் கோபமே விஞ்சியது; வெறுப்பே மிகுந்தது. "நீ சென்று இளைப்பாறுக, யான் சென்று தருகிறேன் வெற்றி” என்று புறப்பட்டான். இந்நிலையில், மைந்தன் தன்மை, கண்டு வியக்கத் தக்கதாய் விடுகிறது. தவறுடையவன் என்று கண்ட விடத்தும், தந்தைமாட்டுக் கொண்ட காதல் வெளிப் படுகிறது. எழுந்த இராவணனை வணங்கி, "எந்தாய், பொறுத்தி! கோபம் தண்ணிக! யானே போருக்குச் செல்கிறேன், யான் கழிந்தனன் என்ற பின்னர் நல்ல வாக்காண்” என்று கூறிப் புறப்பட்டு விட்டான். வேண்டுமென்றிரந்தவர் அனைவர்க்கும் தானம் வழங்கிப் புறப்பட்டுப் போகிறான். கொடியோன்