இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ix கொந்தளிப்பில், அனைத்துக் கேட்டினையும் அடக்கி விடுவர், நண்பர் ஞானசம்பந்தனார், இராவணன் கூத்தினை இவ்விரண்டிலேயே அடக்கிவிடுகின்றார். நண்பர், மேலும் பல நூல்களைக் கம்பனைப்பற்றி, எழுதுதல் வேண்டும். பிராட்லி முதலியோர் போன்ற பெருஞ் சுவைஞராகி, கம்பன் தன்னையுமறியாது கையாண்ட பாட்டளக்கும் கோலை விளக்கி வைத்தல் வேண்டும். கம்பன் அருள் செய்வானாக! தெ.பொ. மீனாட்சிசுந்தரன்