பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"இந்திரப் பெரும்பதம் இழந்தான்" 93 அவனைக் கடைக்கண்ணால் நோக்கி நோக்கி இருகணிர் கலுழப் போகிறான். வீரர் அனைவரும் அவனுக்குத் துணையாகப் புறப்பட்டனர். ஆனால், வீரன், வலங்கொடு தொடர்ந்தார் தம்மை 'மன்னனைக் காமின்' யாதும் கலங்கலிர்; இனிமேற் சென்று மனிசரைக் கடப்பென். (கம்பன் - 9130) என்று கூறிச் சென்றுவிட்டான். இதுவரை கூறியவற்றான், இந்திரசித்தன் கண்ட இலங்கைவேந்தன் பண்புகள் இத்தகையன என்பதும், அவன் சுற்றத்தார்மாட்டு அன்பு பூண்டவன் என்பதும், கொண்டது விடாத கொடியன் என்பதும், தன் கருத்து முற்றுப்பெற எதனையும் செய்யத் தயங்கான் என்பதும், மனத்தளர்வை அடிக்கடி பெறுகிறான் என்பதும் வெளிப்படுகிற உண்மைகளாகும். 4. "இந்திரப் பெரும்பதம் இழந்தான்" இலங்கை வேந்தன் உடன் பிறந்தான் வீடணன் என்பது யாவரும் அறிந்ததே. மந்திரப் படலத்தில் இராவணனுக்கு உறுதி கூறிய சிலருள் இவனும் ஒருவன். ஆனால், மற்றையோரினும் மாறுபட்ட முறையில் இவனது உறுதிமொழி இருக்கிறது. வீடணன் இராவணனைப்பற்றிக் கொண்ட கருத்துகள் பலவிடங்களிலும் கூறப்படினும், சிறப்பாக இலங்கை கேள்விப் படலத்திலேயே கூறப்படுகிறது. இராமனுக்கு இராவணன் திறத்தை எடுத்துக் கூறுவதாய் அமைந்துள்ள பகுதியாகும் இது. 'மூவரிற் பெற்ற வரத்தொடும் உயர்ந்தான் என்று வீடணன்