பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ல் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் தமையனைக் குறிக்கிறான்; மேலும், 'வெள்ளியம் பெருந் தடங்கிரியைவேரொடும் வாங்கி, உலகமெலாம் அஞ்ச, அள்ளிவிண்தொட எடுத்தனன் என்றும் கூறுகிறான். இன்னும், 'திசை யானைகளின் கொம்புகள் மார்பிற்பட்டு அழுந்த அவற்றை ஒடித்து உள்ளேயே இற்ற கொம்புகள் இருக்குமாறு செய்தவன் என்றும் கூறுகிறான். காலகேயரை இராவணன் வென்ற பின்னர், இலங்கை வேந்தன் என்ற ஒலியைக் கேட்ட அளவிலேயே தானவர் தேவியர் கர்ப்பமும் கலங்குவர். அளகாபுரியில் ஒளித்துக் கொண்டு வாழ்ந்த குபேரன், திரண்ட தனது செல்வத்தையும் ஏனைய போகங்களையும் துறந்து ஒடிப்போனான். எல்லாருடைய உயிரையும் வெளவுவதால் அறக் கடவுள் என்று பெயர் பெற்ற இயமனும், தன் வலியடங்கினான் என்னில், வேறு கூறுவதென்னுளது? இருளைப் போக்குவதற்குரியவன் என்று எல்லாராலும் போற்றப்படுகிற அருணனும் இலங்கையின் வனப்பைக் கண்டானில்லை; வருணனும் கடல் நீருள் மறைந்தமையின், இராவணனிடம் சிக்காது பிழைத்தான். இவ்வாறு தமையனது பெருமையை எடுத்துக்கூறி வந்த வீடணன் இறுதியாக ஒன்று கூறினான். அண்ணலே, என்ன கூறப்போகிறேன்! மலைகள் அழியினும் அழியாத தோள் வலிமையுடைய இராவணன் இன்றழியினும், நாளை அழியினும், சிலகாலம் சென்றழியினும் உன்னாலல்லால் பிறர்ால் அழிக்கப்படான்' என்று கூறுகிறான். என்று லப்புறச் சொல்லுகேன்! இராவணன் என்னும் குன்று லப்பினும் உலப்பிலாத் தோளினான் கொற்றம் இன்று லப்பினும் நாளையே உலப்பினும் சிலநாள் சென்று லப்பினும் நினக்கன்றிப் பிறர்க்கென்றுந் தீரான் - (கம்பன் - 6574)