"இந்திரப் பெரும்பதம் இழந்தான்" 95 இவ்வொரு பாடலில், ஏறத்தாழ இராவணன் பெருமை முழுதும் கூறப்படுகிறது. குன்றுலப்பினும் உலப்பிலாத் தோளினான் என்று கூறுவதால், அவனது புய வலிமை கூறப்படுகிறது. நினக்கன்றிப் பிறர்க் கென்றுந் தீரான் என்று கூறுவதால், புயவலி மட்டும் அல்லாமல், தவவலியும் உடையான் என்பதும் அறியக் கிடக்கிறது. இராவணன் இத்தகைய வலி படைத்தவன் என்பதைக் கூறச் சிலருக்கே உரிமைஉண்டு; அவருள் முக்கியமானவன் வீடண். அவனும் இதனை இப்பொழது கூறுவது சாலச் சிறந்தது. இராவணனிடம் இருக்கும்பொழுது இதனைக் கூறியிருப்பின், அது வெறும் புகழ்ச்சியாய் முடிந்திருக்கும். எனவே, அவனை விட்டுப் பிரிந்த பின்னர்க் கூறியதே சிறப்புடையது. மேலும், இராவணனுக்கு விரோதியும் பகைவனும் ஆன இராமனிடம் சேர்ந்த பிறகு இதனைக் கூறியது, அதுவும், அவ்விராமனிடம் நேரே கூறியது சாலச் சிறந்தது. இதனால், இராவணன் மாட்டு வீடணன் கொண்டிருந்த அச்சம் வெளியாகிறது. இங்ங்னம் விவரமாக இராவணனைப் பற்றி வீடணன் கூறுவதற்கு ஒரு காரணமும் உண்டு. வீடணன் நல்ல அரசியல் ஞானமும் வருவதுணரும் ஆற்றலும் உடையவன்; தமையனிடத்தில் ஒரு பெருங் குறையைக் கண்டான். பகைவனை உள்ளபடி மதியாது அவனது ஆற்றலைக் குறைந்து மதிக்கும் குறையே அது. அதனைப் பன்முறை வீடணன் எடுத்துக் கூறியும் இராவணன் பொருட்படுத்தவில்லை. அதனால், வீடணன், அதே தவற்றை இராமன் செய்துவிடக் கூடாது என்று கருதி, மீண்டும் மீண்டும் இராவணன் பெருமையை வற்புறுத்துகிறான். வீடணன் தன் தலையை வைத்துப் பந்தயம் இ.மா.வி.-8
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/112
Appearance