பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் ஆடிவிட்டான். இனி ஒரு வேளை இராமன் தோற்பானாயின், அத்தோல்வியால் இராமன் அடையும் நஷ்டத்தை விட வீடணனே அதிக துன்பம் அடைகிறவன். இராமன் தோற்பின் சீதையை மட்டிலும் இழப்பான். ஆனால் அவனோடு சேர்ந்த வீடணனோ வெனில், உயிர், குடி முதலிய அனைத்தையும் இழக்க நேரிடும். எனவே, இராமன் வெற்றியில் அவனைவிட அதிகம் கவலை காட்டு பவனாக வீடணன் ஆகிவிடுகிறான். இதுவே அவனுடைய ஆத்திரத்திற்கு அடிப்படைக் காரணம். இராவணனைப்பற்றி இங்ங்ணம் பலபடியாகப் புகழ் வதற்கும் காரணம் இதுவே. அவனை வெறுத்துத் தன்பால் அடைக்கலம் என்று வந்துவிட்ட வீடணனே இங்ங்ணம் இராவணனைப்பற்றிக் கூறுவானாயின், இராகவன் தன் பகைவனை நன்கு அறிந்துகொள்ள இயலும் அல்லவா? அங்ங்னம் அறிந்து கொண்டமையின் ஒருவேளை எங்கே அச்சத்தால் போரை நிறுத்தி விடுவானோ என்று நினைத்துப் போலும் உடனே வேறு ஒரு கருத்தையும் வீடணன் கூறி விடுகிறான். அனுமனுடைய திறமையையும், அவன் இலங்கையில் செய்த அருஞ்செயலையும் இராகவன் முன்னமே அறிந்திருப்பினும், மீண்டும் அதனை வீடணன் கூறுகிறான். தனது துணை வலியையும் இராமன் உணர்ந்து மனத்துதைரியம் கொள்ளவேண்டும் என்பதற்காகவே க்கருத்து மீண்டும் கூறப்படுகிறது. அடுத்து நாம் வீடணனைக் காண்டற்குரிய இடம் இராவணன் மந்திரப்படலமாகும். வானரம் இலங்கையை எரியூட்டிச் சென்ற பின்னர் இராவணன் மந்திராலோசனைச் சபை கூட்டுகிறான். பகையைப்