"இந்திரப் பெரும்பதம் இழந்தான்" 97 பற்றி அவரவர் கருத்தை அவரவர் தாராளமாக வெளியிடும் நேரம் அது. அந்நேரத்தில் வீடணனும் தன் கருத்தை வெளியிடுகிறான். ஏனையோர் கூற்றினும் வீடணன் கூற்று மாறு பட்டிருப்பதற்கேற்பவே அவன் சொற்களும் மாறுபட்டுள்ளன. ஏனையோர் அவையடக்கம் ஒன்று மில்லாது கூறத் தொடங்க, வீடணன் மட்டும் பெரியதோர் அவையடக்கத்துடன் தொடங்குகிறான். 'எந்தை நீ, எம்முனி, தவ வந்தனைத் தெய்வம் நீ, மற்றும் முற்றும் நீ என்று தொடங்கி, தான் மாறுபட்டுக் கூறவேண்டியதன் இன்றியமையாமையைக் கூறுகிறான். "இந்திரப் பெரும்பதம் இழக்கின்றாய் என நொந்தனன் ஆகலின், நுவல்வது ஆயினேன்' என்றதால், இராவணன் செல்வத்தை வீடணன் பெரிதும் மதித்தான் என்பது தெற்றென விளங்கும். ஒருவாறு தமையன்மாட்டு அன்பும் கொண்டிருந்தான் என்பதும் நன்கு விளங்குகிறது. இம்மட்டோடு தன் கருத்தை வெளியிடத் தொடங்காது, தான் தகுதியற்றவன் என்றும், அவ்வாறாயினும் தனது உரையைத் தள்ளாது கேட்க வேண்டும் என்றும் கூறுகிறான். கற்றறு மாட்சிஎன் கண்இன்று ஆயினும் முற்றுறக் கேட்டபின் முனிதி - மொய்ம்பினோய்! (கம்பன் - 6144) எனவே, தன் சொற்கள் இராவணனுக்குச் சினத்தை உண்டாக்குமென்பதை வீடணன் நன்கு அறிந் திருந்தான் என்பது இதனால் வெளியாகிறது. இதற்குக் காரணம் எதுவாயிருக்கும் என்பதை ஆராய வேண்டும். அப்படி இராவணன் வெறுக்கும் சொற்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/114
Appearance