102 ல் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இதனைக் கேட்டனன் இராவணன், கேட்ட ஆண்டகை கரத்தொடு கரதலம் கிடப்பப் பூட்டி வாய்தொறும் பிறைக்குலம் வெண்ணிலாப் பொழிய கீழ்க்காணுமாறு கூறத் தொடங்கினன். "எனக்கு உறுதிகள் கூறுவதாகத் தொடங்கி இறுதியாக அறிவிலிகள் கூறுஞ் சொற்களையே கூறினாய, அற்ப மனிதர் வெல்வர் என்று கூறியது அவர்மாட்டு நீ கொண்ட அச்சத்தினாலா, அன்றி அன்பு காரணமாகவா? கூறுவாயாக." 'அன்பு காரணமாக இங்ங்ணம் கூறினாயா? என்று, இராவணன் கேட்டது சிந்திக்கற்பாலது. இவ்வாறு அவன் நினைக்கக் காரணமென்ன? ஏனை யோரிடம் காணாத சில புதுமைகளை வீடணன் மாட்டுக் கண்டமையாலேயே இராவணன் அவனிடம் ஐயங்கொண்டுள்ளான் என்று நினைக்க வேண்டி யிருக்கிறது. இனி, அடுத்து வரும் பகுதிகளில் வீடணன் விவகாரம் ஒவ்வொன்றிற்கும் விரிவான முறையில் விடையளிக்கிறான் இலங்கை வேந்தன், "மானிடரை வெல்ல வரங் கொள்ளவில்லை என்று கூறினாய். என் வாழ்நாளிற் செய்த செயற் கருஞ்செயல் அனைத் திற்கும் யான் வரங் கொண்டதுண்டோ? திசை யானைகளை வென்றதும், கயிலையை எடுத்ததும் எப்பெரிய வரத்தால் ஆயின என்று சற்று நினைத்துப் பார். மேலும், விரும்பியோ விரும்பாமலோ பயனற்ற சொற்கள் பேசினாய், வானோர் படைக்கலந் தந்த பெருமையைப் பலபடியாகக் கூறினாய்; இதுவரை அவை என்னை என் செய்தன? யான் ஒருபுறம் இருக்க, என்னோடு ஒருவயிற்றுப் பிறந்த உன்னைவிட
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/119
Appearance