பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"இந்திரப் பெரும்பதம் இழந்தான்" 105 இலக்கியத்தில் இத்தகைய மற்றோர் இடம் காண்டற்குரியது. கண்ணபிரானைப்பற்றி இருவர் கூறுகின்றனர். அவனது ஒரே பண்பில் இருவரும் ஈடுபடுகின்றனர். வெண்ணெய் திருடி உண்ணும் அவனது பண்பில் ஈடுபட்ட வில்லிபுத்துரார், 'அலைகமழ் பவள வாயனை என்று புகழ்ந்து போற்று கிறார். ஆனால், இதே பண்பில் மற்றொருவன் ஈடுபடுகிறான். அவனே துரியோதனன். ஆனால், அவன் அதில் ஈடுபடுகிற நேரமும் காலமும் வேறு. மைத்துனக் கேண்மைபற்றி, அருச்சுனன் உயிரைக் காப்பான் வேண்டி, மாயன் மாயத்தால் பகலவனை மறைத்துவிடுகிறான். அதன் பயன் நாமறிந்த ஒன்றே. இதனைக் கண்டு ஆற்றாத துரியோதனன் கண்ணனைப் பழிக்கிறான். எவ்வாறு? முன்பு வில்லியாற் போற்றப்பட்ட அதே பண்பு இப்பொழுது துரியோதனனால் இகழப்படுகிறது. முடையெடுத்த நவநீதம் தொட்டுஉண்டு கட்டுஉண்டு முதனாள் நாகக் குடையெடுத்து மழைதடுத்தும் வஞ்சனைக்குஓர் கொள்கலமாம் கொடிய பாவி - 'படையெடுத்து வினைசெய்யேன்" எனப்புகன்ற மொழிதப்பிப் பகைத்த போரில் இடையெடுத்த நேமியினால் வெயில்மறைந்தான்; இன்னம்இவன் என்செய் யானே ! (வில்லி) 'நாற்றம் எடுத்த வெண்ணெயைத் திருடி உண்டு உதைப்பட்டவன் என்பது முதலடியின் பொருள். இதுவும் உண்மையே! திருடி உண்பவன் நாற்றமில்லாத நவநீதமாக உண்ண வேண்டுமென்றால் எங்குக் கிடைக்கும்? எனவே, துரியன் கூறுவதும் உண்மை