பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"இந்திரப் பெரும்பதம் இழந்தான்" 107 கொள்கிறான். 'போர்ப்புறங்கொடுத்தோர் பொன்ற ஆண் தொழிலோரில் பெற்ற வெற்றியும் அவத்தம்' என்று கூறி விட்டான். - இதனைக் கேட்ட வீடணனுக்கு வருத்தம் எல்லை கடந்து விட்டது. அண்ணன் அழிவுக்கு வழி தேடினவனாயினும், இந்நிலையில் அவனுக்கு வரும் பழியை விரும்பவில்லை. வேறு யாராவது இங்ங்னம் கூறியிருப்பின் என்ன செய்திருப்பானோ, அறியோம்! ஆனால், தனக்கு இலங்கைச் செல்வத்தையே அளித்த இராமன் இங்ங்ணம் கூறினதால் என்ன செய்வது? ஒன்றும் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. எனவே, "அருவிக்கண்ணன், வெவ்வுயிர்ப்போடும் நீண்ட விம்மலன், வெதும்பும் நெஞ்சினன் ஆகிய வீடணன், செவ்வியில் தொடர்ந்த அல்ல செப்பலை செல்வ! என்று கூறினானாம். பொருளும் சிறப்பும் அற்ற சொற்களைக் சொல்லவேண்டா அண்ணலே!' என்பதே அதன் கருத்து. இங்ங்னம் கூறியவுடன் அண்ணனது பெருமை வீடணன் நினைவிற்கு வருகிறது. அவன் வாழ்வையும், மாட்சியையும், வீழ்ச்சி அடைந்தமைக்குக் காரணத்தையும் நினைந்து பார்க் கிறான்; இராகவனை நோக்கி உடன் கூறுகிறான். ஐயனே! கார்த்தவீரியனும், வாலியும் இராவணனை வென்றது. அவர்கள் சொந்த வன்மையாலல்ல. தேவர்கள் சாபத்தால் விளைந்த பயனேயாகும் அது. இனி, இப்பொழுது அவன் வீழ்ச்சியடைந்ததற்கும் தக்கதொரு காரணம் உண்டு. 'தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய காதற்றன்மை நோயும், நின் முனிவுமே அக்காரணங்களாகும். பிறர்மனை நயந்தான் அடைந்த பேதைமைக்கு ஏற்பப் பொறையே வடிவான நீயும் கோபமுற்றனை. ஆதலின், அவன்