108 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் அழிவு நெருங்கியது. அன்றேல், வெல்லுவார் ஒருவருமிலர். மேலும், அவன் திக்கயங்களை வென்ற காலத்தில் அவற்றின் கொம்புகளை மார்பில் ஏற்று ஒடித்தான். மீண்டும் அவைகளைக் களைந்து எறியாமல் மார்புக்கு அணிகலமாகக் கொண்டி ருந்தான். இப்பொழுது மாருதி குத்திய குத்துக்களாலும் நீ எய்த அம்புகளாலும் அவை உருவிச்சென்று முதுகின் வழிப்போயின. அதுவே அவனது முதுகில் புண் உண்டாவதற்குக் காரணமாகும்' என்றுரைத்தான். மேலும், வெவ்விடம் ஈசன் தன்னை விழுங்கினும், பறவை வேந்தை அவ்விட நாகம் எல்லாம் அணுகினும், இவனைப் பகைவர் படைக்கலம் அணுகமாட்டா, அம்மட்டோ? உலகம் முதலிய வற்றைக் காக்குந் தொழில் பூண்ட திருமால் முதலிய பல்லோரும், என்று யாம் இடுக்கண் தீர்வது? என்கிறார்; இவன் இன்று உன்னால் பொன்றினான் என்ற போதும் புலப்படார், 'பொய்கொல்? என்பார்' என்று கூறி அழுகிறான் வீடணன். மேலும் சில கூறப் புகுகிறான் வீடணன்; அண்ணனது வன்மையை நினைக்கிறான். அண்ணா வோ! அசுரர்கள் தம்பிரளயமே, அமரர் கூற்றே என்று கூறத்தொடங்கிய அவன், தனது சொல்லைத் தமையன் தட்டியதை உடன் நினைந்து கொள்கிறான். தன்பால் மிகவும் வெகுண்டு இலங்கை வேந்தன், இஞ்சிமாநகர் இடமுடைத்து, அஞ்சல்! அஞ்சல்!” என்று கூறியதை நினைந்து, ஆசை பழி என்றேன்; எனை முனிந்த முனிவு ஆறித்தேறினாயோ? என்று வருந்துகிறான். 'அண்ணா, நீ யாண்டுச் சென்றாய்? வீரர்கள் புகும் சுவர்க்கம் அடைந்தனையா? அன்றி உன்பாட்டனாம் பிரமன் உறையும் நாடு ஏகினையா? பிறை சூடும்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/125
Appearance