"இந்திரப் பெரும்பதம் இழந்தான்" 109 பெருமானிடம் சேர்ந்தனையா? உனது உயிரை அஞ்சாது கொண்டு சென்றவர் யார்? இங்ங்ணம் கூறி வருந்தும் வீடணனுக்குச் சிறிது சலன மதியும் தலைகாட்டிவிடுகிறது. எத்தகைய தன்மை வாய்ந்த ஒருவனும், இத்தகைய ஒரு நிலையில் கீழ்க்காணுமாறு கூறமாடடான: ஆர்.அண்ா உன்னுயிரை அஞ்சாதே கொண்டு அகன்றார்? அதெலாம் நிற்க, மாரனார் வலியாட்டம் தவிர்ந்தாரே குளிர்ந்தானே மதியம் ' என்பான். (கம்பன் - 9925) காமவேள் இராவணனைத் துன்புறுத்தியதையும், சீதை பாற் கொண்ட காமத் தீயால் வெம்பிய இராவணன் 'மதியம் சுடுகிறது என்று கூறியதையும் இப்பொழுது நினைந்து கொண்டு கூறுதல், இறந்தவனை எள்ளும்முறையில் அமைந்துள்ளது. இது ஒரு பெரிய தவறேயாகும். சுத்த வீரன் ஒருவனும் செய்யாத செயலை வீடணன் மேற்கொள்கிறான். இம் மட்டோடு அவ்வெள்ளல் குறிப்பு நிற்கவில்லை. 'நல்லாரும், தீயாரும், நரகத்தார், துறக்கத்தார். நம்பீ! நம்மோடு எல்லாரும் பகைஞரே; யார் முகத்தே விழிக்கின்றாய்? எளியை ஆனாய்' என்றும் கூறுகிறான். இறந்தவனை, இறுதிவரை விற்போர் விளைத்துத் தன் தனியாண்மை நிறுத்திப் பொன்றிய தலைவனை, "எளியை ஆனாய்' என்று கூறுதல் அறிவுடைமை ஆகாது. இதைவிட ஒன்றும் கூறுகிறான்: சீர்மகளைத் திருமகளைத் தேவர்க்கும் தெரிவரிய தெய்வக் கற்பின் . பேர்மகளை, தழுவுவான் உயிர்கொடுத்துப் பழிகொண்ட பித்தா ! - . (கம்பன் - 9927)
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/126
Appearance