110 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் 'சீதையைத் தழுவுவான் வேண்டி உயிரையுங் கொடுத்து நீங்காத பழியினைப் பெற்றுக் கொண்ட பைத்தியக்காரா என்று கூறுகிறான். ஒரு வேளை இராவணன் புகழ் முழுதும் மங்கிப் பிறன் மனைநயந்தமையால் பழி சூழ்ந்துவிட்டதே என்ற கருத்தால் ‘பைத்தியக்காரா' என்று, அன்பு மிகுதியினாலும் கூறியிருக்கலாம். இதனை நீக்கி விட்டாலும் முன்னர்க் கூறிய இரண்டும் எள்ளல் குறிப்பில் தோன்றியவைகளே என்பதில் ஐயமில்லை. என்வே, இராவணன்மாட்டு வீடணன் கொண்டிருந்த அன்பு கலப்பற்றது, தூய்மையானது என்று சொல்லு வதற்கில்லை. அவன் குடும்பமே இராவணன்பால் நிறைந்த அன்பு கொண்டிருந்தது என்று கூறமுடியாது. திரிசடையை நாம் அறிவோம். பெரிய தந்தையின் உப்பைத் தின்றுகொண்டே அவனது வீழ்ச்சியை விரும்பினவள் அவள். இது நிற்க, வீடணன், இந்த நிலையில் இராவணனைப்பற்றிக் கூறிய இவ்விரு குறிப்புக்களும் மிகவும் தாழ்ந்த மனப்பான்மையைக் காட்டுபவை. முழு விரோதி யாகியவனும், இராவணனைத் தன் பகைமை காரண மாக இழித்துப் பேச உரிமை உள்ளவனுமாகிய இராகவனே இங்ங்னம் கூறவில்லை. இங்ங்னம் கூறாதது மட்டுமன்று. இறந்த பிறகு அவன் மாட்டும், அவனது வீரத்திடத்தும் ஐயங்கொள்வது தவறு என்றன்றோ கூறுகிறான் அவ்வீரன்?
- 薰 地略略g避盘整酸鳗影乳峰 வீடணா! தக்கது அன்றால் என்னதோ இறந்து ளான்மேல் வயிர்த்தல்
- (கம்பன் - 9917) இங்ங்னம் சுத்த வீரன் கூறுவதைக் கேட்ட பிறகும் வீடணன் மேற்கூறியவாறு கூறுவானேயாகில், அவனது