“நாளை வா" எனப்பட்டான் 111 அன்பை என்னெனக் கூறுவது! இராவணனிடத்து அச்சத்தையே மிகுதியாகக் கொண்டிருந்தான் வீடணன் என்று நினைக்கவேண்டியிருக்கிறது. மந்திரத்திலேயே தமது கருத்தை ஏனையோரெல்லாம் அஞ்சாது கூற, பெரிய முகவுரையுடன் இவன் தொடங் குகையிலேயே, இவனுடைய மனக்கருத்து ஒருவா றாகப் புலனாகிறது. இராவணனிடம் ஏனையோர் கொண்டிருந்தது போலப் பயன் கருதாத அன்பைக் கொண்டிருந்தவனல்லன் வீடணன். இத்தகைய அவனே இராவணனது ஆற்றலைப் புகழ்கிறான் என்றால், அதிலும் தன்னால் போற்றப்படும் இராகவன் முன்பாகவே புகழ்கிறான் என்றால், அதிலிருந்து இலங்கைவேந்தன் மாட்சியை நாம் அறியலாமன்றோ? - 5. “நாளை வா” எனப்பட்டான் நற்பண்புகள் பலவற்றிற்கும் உறைவிடமான இராகவன் சிறந்த வீரன். சேவகன் என்ற சொல்லைக் கம்பன் பல இடங்களிலும் வேண்டுமென்றே பயன்படுத்துகிறான். வீரம் ஒன்றுமட்டும் அல்லாமல் நற்பண்புகள் பலவும் உடைய இராமன், தன் பகைவனை எல்லைமீறி ஏசுகின்ற இடம் கம்பன் பாடிய இராமாயணத்தில் இல்லை. அவன் பெரிதும் நேசிக்கின்ற சுக்கிரீவன் இராவணன் மேல் பாய்ந்து விட்டான், தானை காண் படலத்தில், நீண்ட நேரம் ஆகியும் குரங்கினத் தலைவன் மீண்டானில்லை. அவனுடைய வருகையைப்பற்றியே இராமன் ஐயுறவு கொள்ளும் நேரத்தில் சுக்கிரீவன் மீண்டுவிட்டான்; வெறுங்கையோடு வரவில்லை; இராவணன் மணி முடியைக் கவர்ந்து வந்துவிட்டான். ஆனால், இராமன் 1.மா.வீ.-9
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/128
Appearance