xi கருத்துடன் மீண்டும் நூலைக்கற்கும் முயற்சி எழுந்தது. பொதுவாக, இராமனே காப்பியத் தலைவன் என்றும், 'இராவணன் தீராப் பழி செய்த கொடும் பாவி என்றும் கொண்டிருந்த கருத்துக்கள் சரியா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட நேர்ந்தது. மேற்கூறிய பொதுக் கருத்துக்கள் படியக் காரணம் உண்டு. இதுவரையிலும், நூலை நூலாகப் படிக்கும் வழக்கம் இல்லை. நம்மால் பூசிக்கத் தகுந்த ஒரு பாத்திரம் இராமன் என்றும், அவனுடைய சரிதையைக் கூறும் நூல் இராமாயணம் என்றும் கருதப்பட்ட காரணத்தால் ஆராய்ச்சிக் கண்ணுடன் நூலைப் பார்க்க யாரும் முன் வரவில்லை. - இத்தகைய அருங்காப்பியத்தைக் கலைஞன் ஆக்கியதன் நோக்கமே, இதனை நாம் நன்கு சுவைக்க வேண்டும் என்பதேயாம். கலையைச் சுவைக்கும் பழக்கம் எக்காரணத்தாலோ நம்மை விட்டு நீங்கி விட்டது. இராமனைக் காப்பியத் தலைவனாகக் கருதுவதில் இழுக்கு ஒன்றும் இல்லை. ஆனால், காப்பியத்தில் காணப்படும் இராமனை விட்டுவிட்டு, நாம் மனத்தில் கற்பனையில் கொண்டிருக்கும் ஒர் இராமனுடன் அக்கம்பனுடைய இராமனைப் பிணைப்பதனாலேயே இடர்ப்படுதல் நேரிட்டது. அம் முறையை விட்டு, 'கம்பராமாயணத்தில் காணப்படும் இராமன், சீதை, இராவணன் ஆகிய அனைவரும், கம்பனுடைய படைப்புக்கள் என்ற எண்ணத்துடன் நூலைக் கையில் எடுத்தால், பல இடர்ப்பாடுகள் நீங்கி விடுவதை அறிய முடியும். 'உண்மையாக இராமன் என்ற ஓர் அரசன் வாழ்ந்தானா? என்பது போன்ற வினாக்கட்கு விடையைக் கம்பராமாயணத்தில் தேடிப் பயன் இல்லை. கம்பராமாயணத்தில் காணப்படும்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/13
Appearance