உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் 'உனக்கு உள்ள படைக்கலம் அனைத்தையும் கொண்டு நில் ஐயனே என்று கூறுகிறான். எனவே, சிறந்த ஒரு வீரனைக் கண்டவுடன் மற்றொரு வீரன் அவன்பால் ஈடுபடும் நிலைக்கு இஃது ஒரு சிறந்த உதாரணமாகும். முதன் முதலில் இராகவன் 'பாவி என்று இராவணனைப் பழித்தமை, மனநூல் கருத்துப்படி பொருந்துவதேயாகும். தன் துன்பங்கட்கெல்லாம் காரணனான ஒருவனை நேரே கண்டபொழுது, எத்துணைச் சிறந்த பண்புகள் உடைய ஒருவனுக்கும் மன அமைதி கெடுதல் இயற்கை. அம்முறையில் அமைதி கெட்டு, இராகவன் பாவி என்று விளித்தான்; ஆனால், இதற்குள் தன்னைக் கட்டுப்படுத்தித் தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு விட்டான். மேலும், தான் உயிர்ப்பிச்சை தருவதாகக் கூறியதையும் இராவணன் சட்டை செய்யவில்லை என்பதையும் இராமன் நன்கு கண்டுகொண்டான்; எனவே அவனிடம் கொண்டுள்ள மதிப்பும் உயர்ந்துவிடுகிறது. இவை இரண்டுஞ் சேரவே, பேச்சு முறையும் மாறி விடுகிறது. இதனை அடுத்துவரும் பாடல் இக்கருத்தை நன்கு வலி உறுத்துகிறது. ஆள ஐயா!' என்னும் இச்சொற்களால் மீண்டும் இராகவன் இராவணனை விளிக்கிறான். எனவே, இராகவன் மனம் சாந்த நிலையை அடைந்துவிட்டமை அறிகிறோம். இந்நிலையில் இராமன் தன் மனைவியைக் கவர்ந்து சென்ற கள்வனைத் தன் எதிரே காணவில்லை; அதற்கு எதிராகப் போர் வீரன் ஒருவனையே, தன்னொடு பகைமை பூண்டுள்ள ஒருவனையே காண்கிறான். பகைவீரன் ஒருவனுக்குத்தரவேண்டிய அனைத்த மதிப்பையுந் தந்து அவனை விளிக்கிறான். இறுதியாக, இராமனும் இராவணனும் போர்க் களத்தில் சந்திக்கின்றனர். நீண்ட நேரம் போர்