பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் வில்லை; சுத்த வீரனாகிய இராவணன் மேல் தான் கொண்ட ஐயத்திற்காக வருந்துகிறான்.

  • - was ot to or sm or so வீடனா! தக்கது அன்றால் என்னதோ இறந்து ளான்மேல் வயிர்த்தல்

(கம்பன் - 9917) என இங்ங்ணம் கூறுவதால், இராமன் மனநிலையை ஒருவாறு ஊகிக்க இயலுகிறது. இதுவரை போர் செய்த முறையிலேயே இராவணனைப்பற்றி நன்கு அறிந் திருக்க வேண்டியிருக்க, அதனை விட்டு அவன் மேல் ஐயங்கொண்டதற்காகத் தன் மேல் தானே தவறு கூறிக்கொள்கிறான். எனவே, இராகவன் கண்ட இராவணன் எத்தகையவன் என்பதைக் கண்டோம். இனி, இலக்குவன் கண்ட இராவணனைக் காண்போமாக. 6. வழி அலா வழிமேற் செல்வான்' இராவணன் மேல் அதிக வெறுப்புக் கொள்ள உரிமை உடையவன் இராகவனாயினும், அவனைக் காட்டிலும் இராவணனை மிகுதியாக வெறுத்தவன் இலக்குவனேயாவான். அதன் காரணம் இளையோன் இராமன்மாட்டுக் கொண்டிருந்த அன்பேயாகும். சீதையைக் காணாது வனத்தில் இராம இலக்குவர் இருவரும் தேர்க்கால் சென்ற வழி தேடி வருகின்றனர்; பல குறிகளைக் கண்டு போர் நிகழ்ந்திருக்கும் என்று ஊகிக்கின்றனர். பல குண்டலங்களும் மணிக்கொடி களும் கிடைத்ததால் சடாயுவோடு பொருதார் பலர் போலும் என்று கூறுகிறான் இராமன். ஆனால்,