பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வழி அலா வழிமேற் செல்வான் 117 பெண்ணைக் கவர்ந்து செல்லப் பலர் வருதல் இயலா தென்பதை உணர்ந்த இலக்குவன், 'பொருது தாதையை, இத்தனை நெறிக்கொடு போனான் ஒருவனே; அவன் இராவணனாம் என உரைத்தான் (கம்பன் - 3493) ஏறத்தாழ இத் தருணத்திலிருந்தே இளையவன் இராவணனைப்பற்றி அறிந்துகொள்கிறான். இலங்கையில் வந்து தங்கிய பின்னரும் இராமன் இராவணனுக்குத் தூது அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு தம்பியின் கருத்தறியக் கேட் கிறான். உடனே இலக்குவன் சீற்றமே ஒரு வடிவா கிறான். இவன் கூறும் சொற்களிலிருந்தே இராவணனைப்பற்றி இலக்குவன் கொண்டுள்ள கருத்து வெளியாகிறது. "தேவர்கட்கும் முனிவர்கட்கும் இடுக்கண் செய்தான்; இந்திரனைச் சிறையிட்டான்; தேவியைக் கவர்ந்து சென்றான்; என்னால் விரும்பப் படும் உன்னைத் துயர்க்கடலுள் ஆழச் செய்தான்; நம் சிற்றப்பனாகிய சடாயுவைக் கொன்றுள்ளான். இத்தகைய ஒருவனைக் கொல்லாதுவிடின், அதனை விடத் தவறு வேறில்லை" என இங்ங்ணம் கூறி முடிக்கிறான் இலக்குவன். எனவே, அவன் இராவணனைப்பற்றி மிகத் தாழ்வான கருத்துக் கொண்டிருந்திருக்கிறான் என்பதை அறிகிறோம். பெரும்பலம் உடையவனாயினும், தவறான வழியிற் செல்கிறான் இராவணன் என்பதைக் கூற வழி அலா வழிமேற்செல்வான்' என்று இலக்குவன் கூறுவது அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டுவதே. முதற்போர் புரி படலத்தில் இவர்கள் இருவருஞ் சந்திப்பதைக் காண்கிறோம். முதன் முதலாக