118 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இராவணன் இலக்குவனது வில் நாணொலியைக் கேட்கிறான். சிறந்த இயந்திரப் பயிற்சி உடையான், இயந்திரம் ஒடுகையில் உண்டாக்கும் ஒலியைக் கொண்டே, அதன் தன்மையையும் வன்மையையும் அறுதியிட்டுக் கூறிவிடுவான். அங்ங்னமே, இலக்குவன் நாண் எறிந்த ஒலி கேட்டு, அரக்கர் தலைவன் 'ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிசன்! என்னாக் கூறினன். எனவே, இலக்குவன் வன்மையை இராவணன் நன்கு அறிந்துள்ளான் என்பதும் நன்கு புலப்படுகிறது. ஆனால், இராவணன் மேல் தனியான தொரு பகைமை கொண்டுள்ளான் இளையோன். சீதையைத் தான் காத்துக் கொண்டு இருந்தமையின் அவளுக்கு நேர்ந்த தீங்கால் தான் அவமானம் செய்யப் பட்டதாகவே நினைக்கிறான். எனவே, இராவணனை நேரே கண்டதும் அவன் 'காக்கின்ற என்நெடுங் காவலின் வலி நீக்கிய கள்வா என்று விளிக்கிறான். இத்தகைய மனநிலையுடைய அவன் இராவணனை நன்கு அறுதியிடுதல் இயலாத காரியமாகும். போர் நடக்கையில் பல சந்தர்ப்பங்களில் இராவணன் அம்பால் இலக்குவன் துன்பமடைகிறான். இராவணன் அம்பால் இளையோன் மனம் கலக்கம் அடையவில்லை எனினும் அவனை வியவாது இருக்க இயலவில்லை. 7. வெலற்கு அரியான் அனுமன் இராவணன்மேல் விருப்பு வெறுப்பற்ற கருத்துக் கொண்டவனல்லன். மனைவியை விட்டு வருந்தி நிற்கும் சுக்கிரீவனுக்கு அடிமை பூண்டு வாழும் சொல்லின் செல்வன், அதே நிலையிலுள்ள இராமன்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/135
Appearance