120 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் கொன்று விடலாமா!' என நினைக்கிறான். வாள் ஆற்றற் கண்ணாளை வஞ்சித்தான் மணிமுடியென் தாளாற்றலாலிடித்துத் தலை பத்தும் தகர்த்து இன்றென், ஆள் ஆற்றல் காட்டேனேல், அடியேனாய் முடியேனே! என்றும் கூறுகிறான். 'உறங்குகின்ற வனோடு பொருதல் தகாது என்ற எண்ணம் ஏனோ கலையெலாம் கற்ற அனுமனுக்குத் தோன்றவில்லை! பின்னரும் அவன் நினைத்ததைச் செய்யவில்லை; காரணம், அறம் கருதியது அன்று; நேமியான் பணியன்று என்று நினைத்ததாலே ஆகும். ஆனால், பிணி வீட்டு படலத்தில் இராவணன் எதிரே நிறுத்தப் படுகிறான் அனுமன். அப்பொழுது அவன் 'உறங்கு கின்றபோது உயிர் உண்டல் குற்றமென்று ஒழிந்தேன்' என்று கூறுவதாகக் கவிஞன் பாடுகிறான். இக்கருத்தை முன்னர்க் கூறாது இப்பொழுது கூறுவதால், ஆசிரியன் மாருதி மனநிலையைத் தெரிவிக்கிறான். சிறந்த வீரனாகையால், தன் வலியும் மாற்றான் வலியும் தூக்கிப் பார்க்கிறான் அனுமன்; நல்லதொரு முடிபுக்கே வருகிறான். என்னையும் வெலற்குஅரிது இவனுக்கு ஈண்டுஇவன் தன்னையும் வெலற்கு அரிது எனக்கு; தாக்கினால் அன்னவே காலங்கள் கழியும்; ஆதலான் துன்னருஞ் செருத்தொழில் தொடங்கல் தூயதோ ? . . (கம்பன் - 5866) இதுவே அனுமன் கொண்ட முடிவு. அனுமன் போர்த் திறத்தை, அருமந்த மைந்தனாம் அட்சய குமாரனைப் பலியிட்டு, அதன் பயனால் அறிந்த இராவணன், ஒரு வீரனுக்குரிய மரியாதையோடு வினாவுகிறான். 'மூவருள் ஒருவனோ, தென்திசைக் கோனோ, யாரையோ நீ! என்று கேட்கிறான். கேட்டவன் யார்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/137
Appearance