'இடிக்குநர் இல்லான்' 123 விடை கூறினாள். அதன் பின்னர் அவன் யாரென்று சீதை வினவ, துறவி வேடம் பூண்ட இராவணன், நாணமற்றுத் தன் பெருமைகளைப் பலபடியாக விரிக்கின்றான்; மேலும், தான் வேறு ஒருவன் போல நடித்து அத்தகைய இராவணன் ஊரிலிருந்துதான் வந்ததாகவும் கூறினான். உடனே சீதையின் மன நிலையை நாம் அறிய முடிகிறது. இராவணன் பெருமைகளைப் பற்றித் துறவி பலபடியாகக் கூறியும் சீதை அதனைக் காதில் வாங்கியதாகவே தெரிய வில்லை. அம்மட்டோடில்லை! சேதன மன்னுயிர் தின்னும் தீவினைப் பாதக அரக்கர்தம் பதியில் வைகுதற்கு ஏதுஎன் ? (கம்பன் - 3367) என்று இவ்வாறெல்லாம் வார்த்தையாடிய பிறகு சீதையைப் பூமியுடன் பெயர்த்துத் தேரில் வைத்துக் கொண்டு இராவணன் ஆகாய வழியே செல்கிறான். அந்நிலையில், 'நீ மானுடர் மாட்டு அஞ்சவில்லை எனில், தேரை நிறுத்தி அவருடன் பொருக! என்று சீதை கூறவே, இராவணன் மானிடரொடு பொருதல் தனக்கிழிவென்று கூறிவிட்டான். உண்மையை ஆராயுமிடத்துக் கரதுடனர் பட்ட பாட்டை அறிந்த இராவணன் தன் செயல் முடியும் வரை போரை விரும்பவில்லை. மேலும், தன் பெருமைகளைக் கேட்ட மாத்திரத்துத் தனக்கு இணங்காத பெண்ணே இருத்தலியலாதென்ற கருத்தில் ஊறியவன் என்று நினையவேண்டியுளது. அதனாலேயே சீதையின் வினாக்கட்குப் பொருத்தமற்ற விடை தருகிறான்; மேலும் சீதையால் எள்ளி நகையாடவும்படுகிறான்.
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/140
Appearance