உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ல் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் களுக்கே அச்சமும் கொண்டிருந்தாளென்று அறிய முடிகிறது. 9. தன் இரக்கம் எற்றுஎன்று இரங்குவ செய்யற்க; செய்வானேல் மற்றஅன்ன செய்யாமை நன்று (குறள், 655) "ஒருவன், 'ஏன் இக்காரியத்தைச் செய்தோம்! என்று பின்னர் இரங்கும்படியானவற்றைச் செய்யாமல் இருக்கக் கடவன்; தவறிச் செய்தபோதிலும், இரங்காமலாவது இருக்கக்கடவன்" என்று ஆணையிடு கிறார் வள்ளுவர். இவ்வுரையைப் பின்பற்றுவது எல்லோராலும் இயலுவதன்று. பெரும்பாலார் பின்னால் நினைந்து வருந்த நேரும் செயலைச் செய்யாமல் இருப்பதில்லை; இதைப் போலவே, வருத்தப்படாமலும் இருப்பதில்லை. எத்தனை விதங்கள்தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கிவில்லையே” என்பதும் மெய்யுரையேயன்றோ? மூவுலகங்களையும் வென்று ஆண்ட இராவணனும் வள்ளுவர் வாய்மொழியைப் பின்பற்றி நடக்கும் ஆற்றல் பெற்றிருக்கவில்லை. சீதையை எடுத்து வந்தபொழுது அவன் ஆழ்ந்த சிந்தனை செய்ய வில்லை; தங்கையின் வருணனையால் மயங்கிச் சீதையின் மீது பேச முடியாப் பெருங்காதல் கொண்டு விட்டான், மாமன் மாரீசன், பெருமைக்குப் பங்கம் விளைவிக்கத் தக்க செயல் என்று தடுத்துச் சொல்லியும் கேளாமல், சீதையை வஞ்ச்கத்தால் சிறைபடுத்திக் கொண்டு வந்தான்; பின்னர் அச்செயலின் விளைவாகத் துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தபோது,