xiii காரணமாகவே அழிகிறான். அவனுடைய சூழ்நிலையில் யார் இருந்திருப்பினும் அவனுடைய கதிக்கே ஆளாகியிருப்பர். அத்தகைய நிலையிலேயே, இராவணனும் காட்சி அளிக்கிறான். இராவணனைப்பற்றி உயர்வாகக் கம்பனைக்காட்டிலும் அதிகமாக நாம் ஒன்றும் கூறிவிட இயலாது. காரணம், இராவணன் கம்பனு டைய படைப்பு என்பதே. எனவே அவனுடைய வீழ்ச்சியைப்பற்றியும் நாம் ஒன்றும் கவலை உறுவதற் கில்லை. இது தவிர, இராவணனை வீழச் செய்த முறையில், கம்பன் தன் இனத்திற்கே பழி சூழ்ந்து விட்டான் என்று நாமாகக் கருதுவது பொருத்த முடையதன்று. முற்கூறியபடி, புதிய கருத்தால் தூண்டப்பெற்று, இராமாயணத்தைப் படித்ததில், இராவணன் புதிய தொரு காட்சியை நல்கினான். இராமனை எவ்வாறு கம்பன் ஓர் இலக்கிய மனிதனாக்கி உள்ளானோ, அவ்வாறே இராவணனையும் ஆக்கி உள்ளான் என்ற உண்மை புலப்பட்டது. சாதாரணமானவனுடைய வாழ்வு தாழ்வு என்ற இரண்டிற்கு யாரும் கவலை உறுவதில்லை. அப்படிப்பட்டவனுடைய வாழ்க்கை யாகட்டும், வீழ்ச்சியாகட்டும் யாருக்கும் ஒரு படிப்பினையையும் நல்குவதில்லை. ஆனால், உயர்ந் தோன் ஒருவனுடைய வீழ்ச்சியில் உலகம் ஒரு படிப்பினையை மேற்கொள்கிறது. அல்லாமலும், அவ்வீழ்ச்சியே ஓர் அவலமாகவும் கருதப்படுகிறது. அது, 'வெற்றுச் சாவு அன்று. அவலத்திற்கும்' அழிவாகிய சாவுக்கும் வேற்றுமையுண்டு. நாம் பொது வாகக் கருதுகிறபடி, இராவணனை ஒரு கொடும்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/15
Appearance