பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் கிடமாகிறது. தன் தீமையை நினைத்துத் தளர்ந்து பேசும் இராவணனை நோக்கிச் சேனாதிபதி, வள்ளுவரைப்போல உபதேசம் செய்யத் தொடங்கி விட்டான். வஞ்சனை மனிசரை இயற்றி வாள்நுதல் பஞ்சன மெல்லடி மயிலைப் பற்றுதல் அஞ்சினர் தொழில்என அறிவித் தேன் அது தஞ்சென உணர்ந்திலை உணரும் தன்மையோய் ! (கம்பன் - 8086) தாம் கெட்டிக்காரர் என்று காட்டிக்கொள்ள எதிரி இளைத்த சமயம் பார்த்துத் தாக்குவது மனிதப் பண்பு. இவ்வுபாயத்தை உயர்ந்தோர் கைக்கொள்ளுவதில்லை. சேனாதிபதி இம் முறையைக் கையாண்டது இராவணன்மீது வெற்றி கொள்வதற்கே. அவன் விரும்பியபடியே இராவணன்மீது வெற்றி கொள் வதற்கே. அவன் விரும்பியபடியே இராவணனும், அவன் கூற்றுக்களை ஏற்றுக்கொண்டவனைப்போல, இதை மறுத்துக் கூறாமலிருந்தது. அவன் தன் தீமையை நினைந்து எத்துணைத் தளர்ந்திருக்கிறான் என்பதையே வலியுறுத்துகிறது இந்நிலையில் பிறர் கேலி செய்வதைப் பொருட்படுத்துவது பெரியோர்க்கு அழகன்று. இராவணன் சேனாதிபதியின் கூற்றுக்கு மறுமொழி கொடாதது, தவறு செய்தவனேயானாலும், அவன் தன் இயற்கை இடம் கொடாத ஒரு பிழையையே செய்தான் என்றும், அதன் தீமையை நாம் எடுத்துக்காட்டக்கூடிய அளவுக்கு அவனே உணர்ந்திருந்தான் என்றும் காட்டுகின்றது. சுக்கிரீவன் மணிமுடியைக் கவர்ந்து சென்ற பின் இராவணன் கொண்ட தோற்றம் மிகவும் இரங்கத்தக்க