142 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் மீனினைக் குணரிப்பினும், வேலையின் மீனினை எண்ணி நோக்கினும், அக்கடல் மணலினையெல்லாம் கண்ணி நோக்கினும் கணக்கில என வானரப் படையின் பரப்பை உணர்த்தியதோடு, அப்படையி லுள்ளோர் ஆற்றல்களை விவரமாக எடுத்துக்கூறியும், 'புனங்கொள் புன்தலைக் குரங்கினைப் புகழுதி போலாம்! எனச் சொல்லிச் சிறுநகை செய்தான் இராவணன்: பகைவர் வல்லமையை அனுமானத்தால் அறிய இராவணன் விரும்பவில்லை போலும் என அவன் கூற்றுக்களைப் பொருத்திக் காட்டலாம். ஆனால், முதற்போர் நிகழ்ந்த பின்பும் இராவணன் மாறவில்லையே! முதல்நாட் போரிலே இராகவன் எத்தகையவன் என்பது இராவணனுக்கு மிக நன்றாய் விளங்கி விட்டது. ஆயுதங்களை இழந்து நின்ற தன்னை, இன்று போய் நாளை வா என்று சொல்லியனுப்பிய வீரனது போர்த் திறமையை இராவணனே வியந்து பேசுகிறான்; 'இராகவன் வாளி, ஊழித் தீமையும் தீய்க்கும்; செல்லும் திசையையுந் தீய்க்கும்; சொல்லும் வாயையும் தீய்க்கும்; உன்னின் மனத்தையும் தீய்க்குமன்றோ?' என்று கூறுவதோடு, ‘ஒப்புவேறு உரைக்கலாவது ஒரு பொருளில்லை; வேதம் தப்பின போதும் அன்னான் தனுஉமிழ் சரங்கள் தப்பா என்றும் பேசுகிறான். இவ்வாறு பகைவன் வல்லமையை நன்கு உணர்ந்து கொண்டதை அவனே எடுத்துக்கூறிய பின்னும், மகோதரன் பேச்சால் மயங்கி இராவணன் கும்பகருணனைப் போருக்கு அனுப்பியது பிழையேயன்றோ? மேலும், மகோதரன், முன்உனக்கு இறைவ ரான மூவரும் தோற்றார் தேவர் பின்உனக்கு ஏவல் செய்ய, உலகொரு மூன்றும் பெற்றாய்;
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/159
Appearance