பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் இரக்கம் ( 143 புல்நுனைப் பனிநீர் அன்ன மனிசரைப் பொருளென்று உன்னி என்உனக்கு இளைய கும்ப கருணனை இகழ்ந்தது? எந்தாய் ! (கம்பன் - 7311) என இராவணன் ஏற்றத்தையும் இராகவன் மனிதனே என்ற எண்ணத்தையும் ஒருங்கே கூறினான். இராகவன் போர்த் திறமையை வியந்த இராவணனுக்கு அவன் மனிதனே என்ற எண்ணம் வற்புறுத்தப்பட்டதும், அவனுடைய செயல் மாட்சிகளெல்லாம் மறைகின்றன. இப்பயனைப் பெற மகோதரன் முதலில் இராவணன் மாட்சியைக் கூறி, அவனை மயங்க வைப்பது கருதத்தக்கது. மூவரையும் தோற்கடித்த தன் பெருமையை நினைத்துக் கொண்டதும் இராவணன் மனமாற்றம் அடைகிறான். நாளை வா என்று இராகவன் சொல்லி அனுப்பியதையும் தன்னம்பிக்கை மறக்கச் செய்துவிட்டது. இராவணன் கும்பகருணனைப் போருக்கனுப்பி அருமைத் தம்பியை இழந்தான்; பின்னர், மேகநாதனை அனுப்பினான். மேகநாதன் இராமனோடு செய்த போரில் அனுபவம் ஏற்றபின், தந்தைக்குச் சீதையை விட்டுவிடுமாறு சொல்லுகையில், இராவணன் எல்லையற்ற சினத்தைக் கக்குகிறான். 'என்னை வென்றுளரெனில் உன்னை வென்றுயருதல் உண்மை’ எனக் கும்பகருணன் கூறிய சொற்களும், மேகநாதன் அனுபவமும் அவனுக்குப் பொருளற்றனவாய்த் தோன்றுகின்றன. தன்அனுபவத்தையே புறக்கணித்த வனுக்குப் பிறர் பேச்சும் அனுபவமும் பொருளுடை யனவாகுமா? "என்னை நம்பியே இந்நெடும்பகையை நான் தேடிக்கொண்டேன்' என்று மேகநாதனுக்குக் கூறிப்புறப்படச் சித்தமாகிறான். அவனுடைய இ.மா.வி.-11