தன் இரக்கம் $ 145 வெற்றியுடன் திரும்பி வருவான் என்ற நிச்சயத்துடனே அவனை அனுப்பினான்; எனினும், நான் திரும்புவது நிச்சயமன்று; இறப்பது திண்ணம் என்று கூறிக் கும்பகருணன் விடைபெற்றுக் கொண்டதும், இராவணனுடைய இருபது கண்களும் நீரைச் சொரிந்தன. அவன் எதிர்பார்த்ததற்கு மாறாகக் கும்பகருணன் இறந்தான் என்ற செய்தியைக் கேட்க நேர்ந்தது. அச்செய்தி அவனுக்குச் சீதையின் முன் நிற்கையில் எட்டுகிறது. அவளைத் தனக்கு இணங்கும் படி மாயா சனகனைக் காட்டி மருட்டிக் கொண்டிருக்கும் சமயத்தில், தம்பியின் சாவைக் கேட்டதும், இராவணன் சீதையை அறவே மறந்தான். யாரை அடைய அவன் கும்பகருணனைப் போருக்கு அனுப்பினானோ, அவள் எதிரிலேயே அவளை யடையச் செய்யும் முயற்சியையும் கைவிட்டு, தன் தம்பியின் சாவுக்கு வருந்தியது, அவன் கும்ப கருணனிடத்தில் வைத்திருந்த அன்பின் அளவையே காட்டுகிறது. . . தந்தேன் பிரியேன் தனியோகத் தாழ்க்கிலேன் வந்தேன் தொடர, மதக்களிறே! வந்தேனால், (கம்பன் - 7717) என்ற அவனைப் பின்னும் வாழச் செய்தது இயற்கையேயன்றி அவனுடைய அன்பின்மையன்று. கும்ப கருணன் இறந்ததும் அக்கபாதன் அழிந்தான். மேகநாதன் போருக்குச் சென்றான்; நாகபாசத்தினால் இலக்குவனைப் பிணித்துவிட்டுக் களைத்துத் திரும்பினான்; 'வெற்றி தந்தேன்' என உவகையோடு உரைக்கத் தந்தையை நோக்கி வந்தான். ஆனால், அவன் இராவணனைக் காணச் சென்ற
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/162
Appearance