தன் இரக்கம் $ 147 சினத்தைப் பெற்றிருந்ததோடு செயல் திறமையையும் மிகுதியாகப் பெற்றிருந்தான். இருந்தும், இப்பொழுது தான் நினைத்தபடி செய்யக்கூடாமல், மகனை இழந்து விட்டான். ஒரு பெண்ணுக்கு ஆசைப்பட்டு உன்னை இழந்துவிட்டேனே! என்று ஏங்கும் இராவணன், அதன் பின்னர்த் தன் காம இச்சையை அறவே நீக்கியது, அவன் அவ்வார்த்தைகளை உணர்ந்தே கூறினான் எனக் காட்டுவதோடு அவனுக்குத் தனயனிடத்திலிருந்த அன்பின் எல்லையையும் காட்டு கிறது. முன்னர் மாலிய வானிடத்தில் 'சீதை காமனையும் நம்மையும் நாயென மதிப்பாளன்றோ? எனக் கூறியவன், பின்னும் அவளைப் பெறக்கூடும் என முயற்சி செய்த பேதைமை இங்குக் கவனிக்கத் தககது. - 'இராவணன் தனக்காக உயிர் துறந்த கும்பகருன னிடத்தும், மேகநாதனிடத்தும் அன்பு பாராட்டியது இயற்கையே யன்றோ? அதைப் பாராட்டுவது எற்றுக்கு !' என்னும் ஐயம் எழலாம். அவன் துய்மையான அன்பைத் தன் சுற்றத்தாரிடம் செலுத்தினான் என்பதை இவர்களுக்காக அவன் ஏங்கியதால் உணர முடியாதுதான். ஆனால், வீடணன் தனக்குக் கேடு சூழ்கிறான், தன் அரசுக்கு ஆசை கொண்டிருக்கிறான் என்பதை நன்குணர்ந்த பின்னரும், அவனை ஒன்றும் செய்யாமல், நீ பிழைத்துப் போ!' என்று போக விட்டது கைம்மாறு கருதா அன்பன்றோ? தஞ்சென மனிதர்பால் வைத்த சார்பினை வஞ்சனை மனத்தினை; பிறப்பு மாறினை; - நஞ்சினை உடன்கொடு வாழ்தல் நன்மையோ ? (கம்பன் - 6371)
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/164
Appearance