உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இராவணன் வீழ்ச்சி 1. சூர்ப்பணகைப் படலம் 'பகலோ!' என்று ஐயுறக்கூடிய ஒளிவீசும் அரியணையில் வீற்றிருக்கிறான் அரக்கர் கோமான், அவையில் இந்திரன் முதலிய தேவர் பலரும் வீற்றிருக்கின்றனர். அங்கியங்கடவுளே நின்று ஒளிதருகின்றான். 'முக்கோடி வாணாளும், முயன்றுடைய பெருந்தவமும், உலகின் எத்திக்கிலும் உள்ளவர்களால் வெல்லப்படாய்' என்று இறைவன் தந்த வரபலமும் பொலிந்து விளங்கும் முகத்தோடு வீற்றிருக்கிறான் இலங்கை வேந்தன். வெற்றியின் பெருமிதமும், யாவர்க்கும் தலைவன் என்ற எண்ணங் காரணமாகத் தோன்றிய செருக்கும், அவன் பத்துத் திருமுகங்களிலும் பிரதிபலிக்கின்றன. யாழின் ஒலியும், முழவின் விம்மலும். குழலின் ஒசையும் கலந்த இசையையே என்றும் கேட்டுப் பயின்ற இலங்கை வேந்தன் செவிகளில் அழுகுரல் கேட்கின்றது. அறுந்த மூக்குடனும், சிதைந்த மார்புடனும், அலமந்த கண்களுடனும் தோன்றிய அவன் தங்கை சூர்ப்பனகை, மலையை அடிபணியும் மேகத்தைப் போல அவன் கால்களில் விழுந்து புரண்டாள். தங்கையின் அலங்கோலத்தைக் கண்ட இராவணன் முகத்தில் சினத்தின் குறி தென்பட்டது. ஆதி சேடன் நடுநடுங்கினான்; குல மலைகள் அதிர்ந்தன; திக்கஜங் கள் மூலைக்கொன்றாய் ஓடின, அவன் புருவம் நெரிந்ததைக் கண்ட தேவர் அஞ்சினர்; எமனே, இன்று