பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இறுதிக்காலம் வந்துவிட்டது போலும் !" என்று அஞ்சினான். இராவணன் சினம் ஓங்கியது! மடித்தபில வாய்கள்தொறும் வந்துபுகை முந்தத் துடித்ததொடர் மீசைகள் சுறுக்கொள உயிர்ப்ப கடித்தகதிர் வாள்.எயிறு மின் களுல, மேகத்து இடித்தஉரும் ஒத்துஉரறி, "யாவர்செயல் ? என்றான் (கம்பன் - 31.15) சூர்ப்பணகை, மானுடர் தடிந்தனர்கள் வாளுருவி என்றாள்; இராவணன் சினம் அளவு கடந்து சென்றது. அவன் ஒரு கணம் திகைத்துப்போய் விட்டான்; சூர்ப்பனகையின் சொற்களை எட்டுத் திக்குகளும் எதிரொலித்தன போல் அவனுக்குத் தோன்றிற்று. 'மானுடர் தடிந்தனர்' என்றதன் எதிரொலி அவனைக் கேலி செய்வது போல் இருந்தது. இத்தோற்றம் உண்மையா, பொய்யா?' என்பதை அவனால் நிதானிக்கக் கூடவில்லை; திகைப்பு நீங்கச் சற்று நிதானித்தான்; கண்கள் நெருப்பைக் கக்கின. அவள் கூறியவை உண்மையாய் இருக்க மாட்டா என்றே அவனுக்குத் தோன்றியது. இவள் அச்சங் காரண மாகப் பொய் கூறுகிறாளோ!' என்றும் அவன் ஐயமுற்றான். 'பொய் தவிர்: பயத்தை ஒழி; புக்கபுகல் என்றான். அண்ணன் 'மானுடர் செயல்' என்ற பேச்சை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைச் சூர்ப்பனகை தெளிந்தாள். அவளை அவமானத்திற்கு ஆளாக்கிய ஆடவரைப் பற்றி விரிவாகக் கூறுகிறாள். 'அழகு நிரம்பியவர்; வில் வித்தையில் தேர்ந்தவர்; வேதம் ஒதுபவர்; உன்னைத்துச்சமாக மதிப்பவர்; இவ்வுலகில் இராக்கதர் குலத்தை வேரோடு களையச் சபதம்