சூர்ப்பணகைப் படலம் 151 பூண்டவர்; ஓரொருவரே இறைவர் மூவரையும் ஒப்பார்; தசரதன் மக்கள்; இராம இலக்குவர் எனப் பெயர் படைத்தோர் என்று விவரமாகக் கூறக் கேட்ட பின்னரே இராவணன் தன் தங்கையை அவமானப் படுத்தியது வாயிலாய்த் தன் வலிக்குப் பங்கஞ் செய்தவர் மானுடரே என்பதை ஏற்றுக்கொள்ளு கிறான். மருந்தனைய தங்கையின் மானம் நீங்கிய நிலையைக் கண்டவுடனே கோபங் கொண்டவன், தேவர்களும் எமனும் நடுங்கும்படி சினத்தீயைத் தன் கண்களில் தோற்றுவித்தவன், இன்னும் சும்மா இருக்கக் காரணமென்ன? தங்கையின் நிலைக்குச் சொல் லொணாத வருத்தம் அடைந்தவன், யாவர் செயல்? என்று கேட்டதில் குற்றமில்லை. மானுடர்தடிந்தனர்' என்று கூறக் கேட்டும் வாளா இருந்தது வியப்பைத் தருகிறது! முதலில் அவன் 'மனிதர்கள் இவ்வண்ணம் துணிந்து செய்திருக்க மாட்டார்கள் என்று தன் பெருமிதம் காரணமாகக் கருதியதால், உடனே கோபித்து எழாது, அது நடந்த விதத்தைத் தங்கையை விவரிக்கும்படிக் கேட்டான் என்று கூறுவோமேயா னாலும், சூர்ப்பனகை, அவர்கள் மனிதர்களே என்று மயக்கம் நீங்கும் முறையில் அவர்கள் பெயர்களையும், பரம்பரையையும், அவர்கள் காட்டுக்கு வந்த காரணத்தையும் விவரமாகக் கூறிய பின்னரும், இராவணன் போருக்கு எழவில்லையே! திக்கயங் களையும், தேவரையும் வென்ற அவன் புயவலி என்ன ஆயிற்று? கயிலையை எடுக்கத் துணிந்த அவன் மனவலி மடிந்துவிட்டதா? இல்லை என அவனே கூறகிறான். இத்தகையவலி படைத்த இராவணன் இன்னும் உயிரோடிருக்கின்றான் என்று அவன் தன்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/168
Appearance