152 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் தங்கையைத் தேற்றும் முறையில் கூறிய சொற்களே அவன் இறைமாட்சியின் மாண்பை அறியும் வாயிலாய் அமைகின்றன. சூர்ப்பணகை அழுதவாறு அண்ணன் கால்களில் வந்து விழுந்தது, தன்னை அவமதித்தவரை அவன் பழி வாங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்வதற்கே. இதை இராவணன் உணராமல் இல்லை. தங்கையின் நிலையைக் காண அவனுக்கு வருத்தமும், அவளை அந்நிலையையடையச் செய்தவர்மீது கோபமும் ஏற்பட்டன. ஆனால், தன் மனப்போக்கின்படி அவனை நடந்துகொள்ள முடியாமற் செய்தது அவனு டைய ஆண்மைக் குறைவன்று அவன் வீற்றிருந்த அரியணையே! தங்கைக்காக வருந்தி, அவள் விருப்பப்படி அவளுடைய பகைவரை அழிக்க உறுதி கொண்ட இராவணன், இறைவனாயும் இருக்கின்றனன் அன்றோ? அத்தகையவன் தங்கை யினிடத்துள்ள அன்பு காரணமாக, அவள் ஏன் அவமானப்படும்படி நேர்ந்தது என்று ஆராயாமல், செயலில் இறங்குவது அவன் நிலைக்கு ஏற்புடைய தாகுமா? இதை வற்புறுத்தக் கம்பன், கேட்டனன் உரை, கண்டிலன்; எழுந்தான்' எனக் கரன், சூர்ப்பணகை கூறியதைக் கேட்டவுடன் போருக் கெழுந்ததைக் கூறுகிறான். கரன் எல்லையைக் காவல் புரியும் படைத்தலைவன்; அந்நிலைக்குத் தக்கபடி தன் தங்கையை அவமானப்படுத்தியவரைக் கொல்ல. உடனே எழுந்தான். ஆனால், இராவணன் வேந்தனன்றோ? அவன் எவ்வாறு ஆராய்ச்சி யில்லாமல், பழி யாருடையது என்று தீர்மானிக்காமல், போருக்கு எழக்கூடும்? *
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/169
Appearance