உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் அதை அவள் கூசாமல் வெளியிட வாய்ப்பளித்தது இராவணன் கேள்வி. சொல்என்றன் வாயிற் கேட்டார் தொடர்ந்தெழு சேனை யோடும் கல்லென்ற ஒலியிற் சென்றார் கரன்முதல் காளை வீரர்; எல்லொன்று கமலச் செங்கண் இராமன்என்று இசைத்த - - ஏந்தல் வில்லொன்றில் கடிகை மூன்றில் ஏறினர் விண்ணில் எனறாள (கம்பள் - 3130) அவள் வாய்ச்சொல் கேட்டவுடன், ஆலோசனை யின்றிப் போருக்கெழுந்த கரன் முதலியோர் காளை வீரராம்! இராவணனைப்பற்றிய அவள் அபிப்பிராயத்தை, அவள் இன்னும் தெளிவாக எப்படி உரைத்திருக்கக்க கூடும்? இராவணன் அவள் குறிப்பை உணராமலில்லை. இருதலைக்கொள்ளி எறும்புபோல அகப்பட்டுக்கொண்டு திண்டாடும் அவன் நிலை மிக இரங்கத்தக்கதொன்றே! தன்னைக் கரனைப்போல அவளிடத்து அன்பில்லாதவனாக அவர் கருதும்படி செய்து விட்ட தன் நிலைக்கு வருந்தினான். இதுவரை கோபத்தையே வெளிக் காட்டிய அவன் கண்களனைத்தும், இப்பொழுது மின்னலொடு சேர்ந்த மழையைப் போல, சினத்தீயின் பொறிகளோடு நீரையும் பொழிந்தன எனக் கூறுவதன் மூலம் கம்பன் அவன் மனநிலையை நன்கு வெளிக்காட்டுகிறான். தங்கை அவமானப் பட்டதற்கே கண்ணில் நீரைச் சொரியாதவன், கரன் முதலிய வீரர் இறந்ததற்காக அழுதான் எனக் கூறுவது பொருந்தாது! இதைத் தெளிவாக வற்புறுத்த விரும்பியே கவிஞன்,