பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூர்ப்பனகைப் படலம் 157 வேண்டும் என்றும் இராவணன் கருதினான் என்பதைக் காட்டுகின்றது. இத்தகையவனன்றோ இறைவன் ! சூர்ப்பணகை இராவணன் கேள்விக்குப் பதில் கூற மழுப்புவதை நோக்க, அவன் நியாயத் திறன் நுட்பம் விளங்குகின்றது. அவள் அண்ணன் இவ்வாறு கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை. முன்னரே சீதையைப் பற்றிக் கூறி இராவணனை மயங்கச் செய்ய வேண்டும் என்று சூழ்ச்சி செய்துகொண்டு வந்தவளேயானாலும், இப்பொழுது எதிர்பாராத விதத்தில் தாக்கப்படவே, அவள் திகைப்படைந்தாள். எனினும், அவள் பெண்ணாய் இருந்ததோடு, இராவணனுடனும் தோன்றியவள் அல்லளோ? "என்வயின் உற்ற குற்றம் யாவர்க்கும் எழுதொ ணாத தன்மையின் இராம னோடும், தாமரை தவிரப் போந்தாள் மின்வயின் மருங்குல் கொண்டாள் வேய்வயின், மென்றோள் . கொண்டாள் பொன்வயின் மேனி கொண்டாள் பொருட்டினால் புகுந்தது' எனறாள (கம்பன் - 3133) இராவணன் கேள்வி சூர்ப்பணகைக்குத் திகைப்பளித்ததைக் காட்டிலும், அவள் பதில் அவனைத் திகைக்கவைத்தது. இதுவரை இராம இலக்குவர். கர துடணர், தன் தங்கை இவர்களே சம்பந்தப்பட்ட வழக்கு இஃது என்றுஎண்ணி இருந்தவனுக்குத் திடீரென்று ஒரு பெண் புகுத்தப்பட்ட தோடு, துன்பம் எதனையும் தோற்றுவிக்கக்கூடாத இயல்புடைய அவளே இவ்வழக்குக்கு மூல காரணம் எனக் கூறப்படவே, அவன் நிலை தடுமாறினான்.