பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 ல் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் வழக்கின் விவரங்கள் அனைத்தும் அவன் மனத்தை விட்டு மறைந்தன. அவன் 'ஆரவள் ? என்று ஆவலோடும் பரபரப்போடும் கேட்டான். சூர்ப்பனகையின் சூழ்ச்சி வெற்றி பெற்றது. தான் பெற்ற வெற்றியை அவள் நன்கு உணர்ந்து கொண்டாள் போலும்! சீதையின் எழிலைச் சித்திரிக்க அவள் ஐம்பத்திரண்டடிகள் பேசியதே அதை உணர்த்துகின்றது. இராவணன் இவ்வளவையும் பொறுமையோடும். வியப்போடும், ஆவலோடும் கேட்டான் முடிவில் இவற்றைத் தனக்குச் சொல்லிய சூர்ப்பனகையையே மறந்துவிட்டான்! கரனையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான் உரனையும் மறந்தான்; உற்ற பழியையும் மறந்தான்; வெற்றி அரனையுங் கொண்ட காமன் அம்பினால் முன்னைப் பெற்ற வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான். - (கம்பன் - 3149) இராவணன் அறிவு நுட்பம் எங்கே! அவன் இறைமாட்சி எங்கே! இவைகளைச் சுட்டுப் பொசுக்கிய சூர்ப்பணகையின் சூழ்ச்சியின் திறத்தை என்னென்று வியப்பது! கோதாவரி நதிக்கரையில் இராகவனைக் கண்டாள் சூர்ப்பனகை; கண்டதும் காதல் கொண்டாள், இராக்கதர்களையே கண்டிருந்த அவள் கண்களுக்கு, எழில் முற்றிய இராமன் வடிவழகு, மன்மதனுடைய உருவமாய்த் தோன்றியதில் வியப்பென்ன! தன்னந் தனியளாய்க் காட்டில் உழன்று திரிந்து வந்த தனக்குச் சிறந்த பற்றுக்கோடு ஒன்று கிடைத்து விட்டது என்று எண்ணினாள்; இறும்பூது கொண்டாள்; அழகிய உருவத்தை எடுத்துக்கொண்டு