சூர்ப்பனகைப் படலம் 159 அண்ணலின் முன் அன்னமென நடந்து சென்றாள். காட்டில் மிக்க எழிலையுடைய ஒரு பெண் நாணத்தின் உருவெடுப்பாய்த் தன் முன் வந்ததைக் கண்ட இராகவனுக்குத் தன்னையே நம்பக்கூடவில்லை. அவன், 'உன் வரவு நல்வரவாகுக! நீ யார்?' என்று அவளைக் கேட்டபடி வரவேற்றான். அவனைத் தன்வழியே அவளைக் கேட்டபடி வரவேற்றான். அவனைத் தன்வழியே இழுக்க எண்ணிய சூர்ப்பணகை, தன் பரம்பரையே மிக்க பெருமை யுடையதாகக் கூறிக் கொண்டு, தன்னை ஒரு கன்னி என்றும் அறிமுகப்படுத்திக்கொள்கிறாள். 'இராவணன் தங்கை என்ற சொற்களைக் கேட்ட இராமனுக்கு ஐயம் எழுந்தது. ஆயின், நீ இவ்வளவு அழகுடை யவளாய் இருக்கக் காரணமென்ன? என்று அடுத்துக் கேட்டான் இராகவன். தவத்தின் தன்மையால் இந்நல்லழகு பெற்றேன்' என்றாள். நங்கை. நீ இராவணன் தங்கையாயின், அவனோடு செல்வத்தில் அழுந்திக் கிடக்காமல், இக்காட்டிற்கு ஏன் தனியே வந்தாய்? என்று மேலும் கேட்டான் இராமன். அவள் அரக்கர் வாழ்க்கைநெறி தனக்குப் பிடிக்கவில்லை என்றும், ஆகவே முனிவர் உறையும் தபோவனத்தைத் தான் சார்ந்ததாகவும் கூறினாள். இராகவனுக்கு அவள் உரையை ஏற்றுக் கொள்வதா, மறுப்பதா என்பதை நிச்சயிக்க முடியவில்லை. எனினும், அவளோடு உரையாடுவதை அவனால் நிறுத்தக் கூடவில்லை. ‘என்னிடம் என்ன காரியம் பற்றி வந்தாய்? என்று கேட்டான் அவன். இராமன் மிகச் சிறந்த வாழ்க்கை நெறியை மேற் கொண்டவனேயாயினும், அவனால் மனித .மா.வி.-12
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/176
Appearance