இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
xvi இறுதியாக ஒரு சொல். இந்நூலை எழுதியதன் நோக்கம் கூறப்பெற்றது. அதை மீண்டும் நினைவூட்டும் கடமை உளது. கம்பராமாயணத்தை ஒரு கலையாகக் கொண்டு கலைக் கண்ணுடன் படித்து எழுதப்பட்ட நூல் இதுவாகும். தனிப்பட்ட பாத்திரங்கள் மீதுள்ள விருப்பு வெறுப்புக்களைக்கொண்டு இந் நூலைப் பார்த்தால், பெரிதும் கருத்து வேறுபாடு தோன்றவே செய்யும். எனவே, விருப்பு வெறுப்பு நீக்கி இதனைப் படிக்க வேண்டுமென்று அன்பர்களை வேண்டுகிறேன். ஆசிரியன்
- இப்பதிப்பில், நூலில் பயின்றுள்ள கம்பன் பாடல் எண்கள் சென்னைக் கம்பன் கழகப் பதிப்பின்படி (1976) அமைந்தன.