பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூர்ப்பனகைப் படலம் 163 மூக்கையும் காதையும் இழந்த வருத்தத்தில் சூர்ப்பணகை தன் அண்ணனை நோக்கி இரங்கியழுதாள். 'உன் தோற்றமும் பெருமையும் என்னால் சிதைவுற்றனவே! என ஏங்கினாள் ? கரதுTடனர்களைக் கூட்டிவர எழுந்தாள்; அவமானத் துடன் அவர்கள் எதிரே செல்ல நாணியவளாய், நிலத்தில் வீழ்ந்தாள்; அறுபட்ட மூக்கைத் தொட்டுப் பார்த்துக் கண்ணிர் வடித்தாள்; இந்நிலையில் இராகவன் எதிரே வரக்கண்டாள்; உன் திருமேனி யைக் காதலித்ததன் பரிசால் என் அழகிழந்தேன்! என்று கூறி அழுதாள். இராமன் அவளை அடையாளங் கண்டு கொள்ளவில்லை. நீ யார்? என்று கேட்டான். 'சூர்ப்பனகை வெறுப்படைய வில்லை; இராவணன் தங்கை என்று மறுமொழி தந்தாள். அப்பொழுதும் இராமன் அவளைத் தெரிந்து கொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை சூர்ப்பனகையும் மனம் தளரவில்லை; உம் மீது மோகங் கொண்டு நேற்று வந்தேனன்றோ?' என ஞாபகமூட்டினாள். - . 'செங்கயல்போல் கருநெடுங்கண் தேமருதா மரைஉறையும் நங்கையிவர் எனநெருநல் நடந்தவரோ நாம் என்ன - (கம்பன் - 2850) இராமன் அவளை அடையாளம் கண்டுகொண்டதாக அறிவிக்கும் இப் பகுதி அவளை நையாண்டி செய்கிறது. ஆனால், இதை அவள் உணர்ந்தாள் இல்லை. காமத்தின் தன்மை இதுவோ! - 'நீங்கள் என் மூக்கை அரிந்தபோதும், உங்களை நான் பகையாகக் கொள்ளவில்லை. என்னை ஏற்றுக் கொள்ளும் என்று சூர்ப்பனகை கேட்டுக் கொண்டது,