164 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் அவளுடைய காதலின் துய்மையையும் ஆழத்தையும் காட்டுகிறது. இவ்வளவில் சீதை இராமனுடைய மனைவி என்று உணர்ந்து கொண்டாள் சூர்ப்பனகை; ‘என்னை இளையவனையாவது ஏற்றுக்கொள்ளச் செய்' என வேண்டுகிறாள். இவ்வேண்டுகோளும் புறக்கணிக்கப்பட்டதோடு, அவளைக் கொல்லவும் இராமன் இசைந்த பின்னர், அவளுக்குக் கோபம் எழுகிறது. உங்களுக்குக் கூற்றுவனாகிய கரனை இதோ அழைத்து வருகிறேன்! என்று சொல்லிச் சென்றாள். 'இராவணனுக்காக ஒரு பெண்ணைத் தூக்கிச் செல்லச் செய்த முயற்சியில் இவ்வாறு பரிபவப் பட்டேன்! எனச் சூர்ப்பணகை கூறியதைக் கேட்ட வுடன், கரன் தன் சேனையைத் திரட்டிக்கொண்டு வந்தான்; இராம இலக்குவர்களோடு போர் புரிந்து மாண்டான். கரனும், துரடணனும், கணக்கற்ற சேனை வீரரும் மாய்ந்தொழிந்ததைப் பார்த்த பின்பும் சூர்ப்பணகையின் காதல் அவியவில்லை. அஃது அதிக மாயிற்று. எப்படியாவது இராமனை அடைய வேண்டும் என்ற எண்ணத்தைத் திடப்படுத்திக் கொண்டாள் அவள்; இவ்வெண்ணம் ஈடேற ஒரு சூழ்ச்சி செய்தாள். சீதையை அப்புறப்படுத்திய பின்னே இராமனைத் தன்னைப்பற்றி நினைக்கச் செய்யக்கூடும் என்பதைச் சூர்ப்பனகை உணர்ந்திருந்தாள்; அதைத் தானே செய்துவிட முயன்றதில் பரிபவப்பட்டாள்; அவமானமடைந்த ஆத்திரத்தில் கர துர்டனர்களை இராமனோடு போர் புரியும்படித் தூண்டினாள். போரில் கரனும், துரடணனும், அவருடைய சேனை வீரரும் மடிந்ததைத் கண்டதும், அவளுக்கு இராம
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/181
Appearance