உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூர்ப்பனகைப் படலம் 9 185 இலக்குவர்களின் ஆற்றல் ஒருவாறு விளங்கிற்று. ஆகவே, சீதையை அப்புறப்படுத்துவதைச் சூழ்ச்சியால் செய்து முடிக்கலாமே யொழிய, தன்னால் இனி ஒன்றும் செய்ய முடியாது என உணர்ந்தாள். இராவணன் காரணன் அல்லன் எனினும், தன் புருடன் கொலையுண்டதற்கு அவனே காரணன் எனச் சூர்ப்பனகை தவறாக எண்ணியிருந்ததோடு, அதற்காக அவனைப் பழி வாங்க வேண்டுமென்றும் எண்ணியிருந்தாள்; தன்னால் காதலிக்கப்பட்ட இராமன் வன்மை எத்தகையது என்பதைத் தன் மூக்கையும் கரதுடனர்களையும் பலியிட்டு உணர்ந்து கொண்டாள். அண்ணனைத் தொலைக்கக் கூடிய பேராற்றலுடையவன் இராமன் ஒருவனே என நன் குணர்ந்துகொண்ட சூர்ப்பனகை, தொடர்பில்லாத இராம, இராவணருக்குள் பகையை மூட்டி விடத் துணிவு கொண்டாள். இதனால் இராவணன் இறப்பது திண்ணம்! அதை அவள் வரவேற்றாள். இராமன் வெற்றியடைவதும் உறுதி! அதுவும் அவள் வேண்டியதே! இராவணன் பராக்கிரமம், இராமனை வெற்றி கொள்ள உதவியளிக்கா விடினும், சீதைக்கு ஊறு செய்யப் போதியதாய் இருக்குமன்றோ? சூர்ப்பணகையின் சூழ்ச்சித் திறமை சாமானியமான தன்று. - - 'இரைத்தநெடும் படையரக்கர் இறந்ததனை மறந்தனள் போர் இராமன் துங்க வரைப்புயத்தின் இடைக்கிடந்த பேராசை . . மனங்கவற்ற ஆற்றா ளாகித் 'திரைப்பரவைப் பேரகழித் திண்ணகரில் - கடிதோடிச் சீதை தன்மை