பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் உரைப்பன்' எனச் சூர்ப்பணகை வர இருந்தான் இருந்தபரிசு உரைத்தும் மன்னோ. (கம்பன் - 3067) கரது டணர் இறந்ததை அவள் மறந்தாள்; இராவணன் படப்போவதைச் சிந்திக்க மறுத்தாள்; இராமன் தோள்களின் மீது கொண்ட காதல் உந்திய தால், அண்ணனுக்குச் சீதையின் தன்மையை விரித்துரைக்க விரைவாய்ச் சென்றாள். மூக்கறுபட்டதற்காக அழுவதை, இராமனைக் கண்டவுடனே சூர்ப்பனகை நிறுத்திவிட்டாள்; பின்னர் அவன் அவள் கருத்துக்கு இசைய மறுக்கவே, கரன் முதலியோரைக் கொண்டு அவனைத் தண்டிக்க வேண்டுமென்று உறுதி கொண்டாள். போர் அவள் எதிர்பார்த்தபடி முடியவில்லை. கரனுக்கு ஒரு குரல் அழுதுவிட்டு, இப்பொழுது மீண்டும் இராவணனைக் காணச் செல்லுகையில், மீண்டும் மூக்கிழந்த துக்கத்தை நினைத்துக் கொண்டவள் போல ஒப்பாரி வைத்தபடி அவள் சென்றாள். உண்மையில் அவள் மனம், 'இராவணனை மயக்கி அவனை விட்டுச் சீதையை அப்புறப்படுத்தச் செய்து, நாம் இராமனை அடைவோம்! என்ற இன்பக் கனவைக் கண்டபடியே இருந்தது. இந்நிலையை மறைக்கவே, அவள் ஒப்பாரியுடன் இராவணனைக் காணச் சென்றாள். அழுகைக் குர்லையே என்றுங் கேட்டறியாத இலங்கையின் மாந்தர் அனைவரும் கண்டு இரங்கும்படி, அவள் இராவணனுக்கு நேர்ந்த பழியைத் தன் ஒப்பாரியால் பறை சாற்றிக்கொண்டு போகத் துணிந்திருப்பாளா? அளவு கடந்ததுக்கம் காரணமாக, அவள் அவ்வாறு செய்ததாகப் பிறர் எண்ணிக் கொள்ள வேண்டுமென்பதே அவள் நோக்கம்.